இன்று துவங்கிய வளர்ந்து வரும் ஆசிய வீரர்களுக்கான எமர்ஜிங் ஆசிய கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் ஏ அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை ஏ அணியை வீழ்த்தி இருக்கிறது.
மொத்தம் எட்டு ஆசிய அணிகள் பங்குபெறும் இந்த தொடரில், பாகிஸ்தான், இந்தியா, யுஏஇ தொடரை நடத்தும் ஓமன் என நான்கு அணிகள் ஒரு பிரிவிலும், இலங்கை, பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் என நான்கு அணிகள் ஒரு பிரிவிலும் இடம் பெற்று இருக்கின்றன.
அசத்திய ஆப்கானிஸ்தான் இளம் வீரர்கள்
இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஜுபைத் அக்பரி 54 பந்தில் 57 ரன்கள், செடியுல்லாஹ் அடால் 46 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் உடன் 83 ரன்கள் எடுத்து நல்ல அடித்தளத்தை உருவாக்கினார்கள்.
இதற்கு அடுத்து சர்புதீன் அஷ்ரப் மட்டுமே 8 பந்தில் 12 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் பந்துவீச்சில் துஷன் ஹேமந்தா 4 ஓவர்கள் பந்துவீசி 23 ரன்கள் தந்து 6 விக்கெட் கைப்பற்றினார்.
இரண்டாம் பகுதியில் சரிந்த இலங்கை
இதற்கடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இலங்கை அணி முதல் 10 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்தது. 86 ரன்களுக்கு இரண்டு விக்கெட் மட்டுமே இழந்து வலிமையான நிலையில் இருந்தது. ஆனால் இங்கிருந்து மேற்கொண்டு 73 ரன்கள் மட்டும் எடுத்து எட்டு விக்கெட்டுகளை இழந்து, 155 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.
இதையும் படிங்க : பண்ட்க்கு பதிலா கீப்பிங் செஞ்ச துருவ் ஜூரேல்.. பேட்டிங்கும் செய்ய முடியுமா?. கிரிக்கெட் விதி என்ன சொல்கிறது.?
இதன் மூலம் ஆப்கானிஸ்தான் ஏ அணி இலங்கை ஏ அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இலங்கை அணியில் அதிகபட்சமாக நுவனிந்து பெர்னாடோ 32 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில் தாவூத்ஸாய் 3 விக்கெட் கைப்பற்றினார். இலங்கை அணி அடுத்து லீக் சுற்றில் பங்களாதேஷ் அணியை வெல்லாவிட்டால், அரையிறுதிக்கு முன்னேறுவது முடியாத காரியமாக மாறிவிடும்!






