பண்ட்க்கு பதிலா கீப்பிங் செஞ்ச துருவ் ஜூரேல்.. பேட்டிங்கும் செய்ய முடியுமா?. கிரிக்கெட் விதி என்ன சொல்கிறது.?

0
1887

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே பெங்களூரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ரிஷப் பண்ட் காயம் அடைந்து மைதானத்தை விட்டு வெளியேறினார்.

இந்த நிலையில் அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பிங் செய்து வரும் துருவ் ஜூரேல் அவருக்காக மூன்றாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய முடியுமா? என்ற சந்தேகத்திற்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

- Advertisement -

காயம் அடைந்த பண்ட்

பெங்களூரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி மிகவும் மோசமாக விளையாடி 46 ரன்கள் மட்டுமே குவித்து ஆல் அவுட் ஆனது. இந்த சூழ்நிலையில் தனது முதல் இன்னிங்ஸ் தொடங்கிய நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஜடேஜா வீசிய ஒரு ஓவரில் ஸ்டம்ப்களுக்கு பின்னால் நின்று கொண்டிருந்த இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டின் வலது முழங்காலில் பந்து தாக்கி காயமடைந்தார்.

அது முன்பு ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கிய போது அதே வலது முழங்காலில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த சூழ்நிலையில் அதே காலில் மீண்டும் அவருக்கு பந்து பட்டு வீக்கத்தை ஏற்படுத்திய நிலையில் அவர் மைதானத்தை விட்டு வெளியேறினார். இந்த சூழ்நிலையில் அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொண்ட துருவ் ஜுரேல் அவருக்கு பதிலாக பேட்டிங் செய்ய முடியுமா? என்ற சந்தேகம் நிலவியது.

- Advertisement -

மாற்று வீரர் துருவ் ஜூரேல்

இந்த சூழ்நிலையில் 2018ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் சில விதிகள் மாற்றி அமைக்கப்பட்ட நிலையில் ஒரு விக்கெட் கீப்பர் காயம் அடைந்து வெளியேறினால் அவருக்கு பதிலாக வேறு விக்கெட் கீப்பர் அந்த பணியை செய்ய முடியும். மேலும் விக்கெட் கீப்பிங் அல்லது ஃபீல்டிங் பணி மட்டுமே மாற்று வீரர் செய்ய முடியுமே தவிர கேப்டனாகவோ பந்து வீச்சாளராகவோ அல்லது பேட்ஸ்மேன் ஆகவோ எந்த கதாபாத்திரத்தையும் ஏற்க முடியாது. ஃபீல்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் பணி வேண்டுமானால் செய்யலாம்.

இதையும் படிங்க:கடைசி ஓவர் 15 ரன்.. திரில் போட்டியில் நியூசி பைனலுக்கு தகுதி.. வெஸ்ட் இண்டீஸ் வெளியேறியது.. மகளிர் டி20 உலக கோப்பை

எனவே காயம் காரணமாக ரிஷப் பண்ட் வெளியேறி இருக்கும் நிலையில் பேட்டிங் செய்யும்போது அவர்தான் உள்ளே வர வேண்டும். மாற்று வீரருக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடி வரும் இந்திய அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் குவித்த நிலையில் மூன்றாவது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. இன்னும் இரண்டு நாட்கள் மீதம் இருக்கும் நிலையில் இந்திய அணி இந்த போட்டியை டிரா செய்யுமா அல்லது வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -