“ஆப்கான் நெதர்லாந்த பார்த்தும் பங்களாதேஷ் திருந்தல.. இது வெறும் புலி வர கதைதான்!” – இந்திய முன்னாள் வீரர் விளாசல்!

0
471
Bangladesh

நடப்பு உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறுகின்ற காரணத்தினால், ஆசிய அணிகள் ஆதிக்கம் செலுத்தக்கூடிய வகையில் இருக்கும் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டது.

இதில் ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு உறுதியாக தகுதி பெறும் என்று பல முன்னாள் வீரர்கள் உலகக்கோப்பைக்கு முன்பாக தங்களது கருத்துக்கணிப்புகளில் தெரிவித்து இருந்தார்கள்.

- Advertisement -

அதே சமயத்தில் ஆசியக் கண்டத்து அணியான இலங்கையும் அபாயகரமான அணியாக சில நேரங்களில் விளங்க செய்யும் ஆனால் அந்த அணிக்கு தற்போது நட்சத்திர முன்னணி வீரர்கள் காயம் அடைந்துள்ளது பின்னடைவாக இருக்கிறது என்று கூறப்பட்டது.

ஆனால் பங்களாதேஷ் அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் சில முக்கியமான அணிகளுக்கு பெரிய அச்சுறுத்தலை கொடுக்கும் என்றும், அந்த அணி அரையிறுதிக்கு வந்தால் ஆச்சரியப்பட எதுவும் கிடையாது என்றும் முன்னாள் வீரர்களால் கூறப்பட்டது.

இப்படியான எதிர்பார்ப்போடு பங்களாதேஷ் அணி நடப்பு உலக கோப்பை தொடருக்கு இந்தியாவிற்கு வந்தது. உலகத்தில் எந்த அணிக்கும் கிடைக்காத ரசிக ஆதரவு பெற்ற அந்த அணியின் ரசிகர்களும் நிறைய பேர் இந்தியாவிற்கு வந்தனர்.

- Advertisement -

ஆனால் பங்களாதேஷ் அணியின் செயல்பாடு சொந்த நாட்டு ரசிகர்களை மட்டும் இல்லாமல் கிரிக்கெட் ஆர்வலர்களையும் வெறுப்பேற்றும் விதமாக அமைந்திருக்கிறது. அந்த அணி இதுவரை ஒரே போட்டியில் அதுவும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மட்டும்தான் வென்று இருக்கிறது.

மேலும் நடப்பு கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளை ஆப்கானிஸ்தானும், தென் ஆப்பிரிக்க அணியை நெதர்லாந்து அணியும் வீழ்த்தி உலகக் கோப்பை தொடருக்கு நல்ல சுவாரசியத்தையும் எதிர்பார்ப்பையும் கூட்டி இருக்கின்றன. ஆனால் 20 வருடங்களுக்கு முன்னால் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற பங்களாதேஷ், தன் பங்குக்கு இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை எதுவும் செய்யவில்லை.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” இந்த காலக்கட்டத்தில் மிகவும் குறைவான செயல்பாட்டை கொண்டு இருக்கின்ற அணியாக பங்களாதேஷ்தான் இருக்கிறது. அந்த அணிக்கு அவர்களுடைய ரசிகர்கள் தரும் ஆதரவும் நம்பிக்கையும் போற்றத்தக்கது. ஆனால் அவர்களுடைய செயல்பாடு எரிச்சல் ஊட்டும் வகையில் இருக்கிறது. அவர்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு டெஸ்ட் அந்தஸ்து பெற்றவர்கள் மாதிரி விளையாடவில்லை!” என்று கோபமாகக் கூறியிருக்கிறார்!