AFG vs SL.. 38 ஓவரின் அதிரடி சேஸ்.. குர்பாஸ் பதிலடி சதம்.. இலங்கையை அனாயசமாக வீழ்த்தியது ஆப்கான்!

0
3045
Afghanistan

நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் கடைசி பயிற்சி போட்டி இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே அசாம் மாநிலம் கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்று வந்தது.

இந்த போட்டிக்கான டாசில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீசுவது என தீர்மானித்தது. ஆப்கானிஸ்தான அணி திருவனந்தபுரத்தில் மழையின் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தனது முதல் பயிற்சி போட்டியை தவறவிட்ட இருந்தது.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்ய வந்த இலங்கை அணி கருணரத்னே 8, பதும் நிஷாங்கா 30 என சீக்கிரத்தில் வெளியேறினார்கள். இந்த நிலையில் மூன்றாவதாக பேட்டிங் செய்ய வந்த குசால் மெண்டிஸ் அதிரடியில் மிரட்டினார்.

மிக அற்புதமாக விளையாடிய அவரது பாட்டில் இருந்து பந்துகள் பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் பறந்தன. சிறப்பாக விளையாடிய அவர் 87 பந்துகளில் 19 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்கள் உடன் 158 ரன்கள் எடுத்து மற்றவர்கள் விளையாடுவதற்காக வெளியேறினார்.

இதற்குப் பிறகு இலங்கை அணி அப்படியே ஒட்டுமொத்தமாக சரிந்தது. சமரவிக்ரமா 39, சரித் அசலங்கா 12, தனஞ்செய டி சில்வா 22, வெல்லாலகே 0 என அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் வரிசையாக வெளியேறினார்கள்.

- Advertisement -

முடிவில் 294 ரன்களுக்கு இலங்கை அணி ஆல் அவுட் ஆனது. ஒரு கட்டத்தில் 400 ரன்கள் எடுக்கின்ற நிலையில் இருந்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் மூத்த அனுபவ வீரர் முகமது நபி நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து ஆப்கானிஸ்தான அணி விளையாட தொடங்கிய பொழுது மழையால் ஆட்டம் தடைபட்டது. இந்த நிலையில் போட்டி 42 ஓவர்கள் என குறைக்கப்பட்டு, இலக்கு 257 ரன்கள் என மாற்றியமைக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர் ரகமன்னுல்லா குர்பாஸ் அதிரடியாக விளையாடி 92 பந்துகளில் 119 ரன்கள் உடனும், மூன்றாவதாக வந்த ரஹமத் ஷா 82 பந்தில் 93 ரன்கள் உடனும், மற்றவர்கள் விளையாடுவதற்காக, வெற்றியை உறுதி செய்து வெளியேறினார்கள்.

இதற்கடுத்து தொடர்ந்து விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 38.1 ஓவரில் இலக்கை எட்டி மிக எளிதாக இலங்கை அணியை வீழ்த்தி பயிற்சி ஆட்டத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்து கொண்டது. இத்துடன் உலகக் கோப்பை பயிற்சி ஆட்டங்கள் முடிவுக்கு வருகின்றன!