இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கான துவக்க ஆட்டக்காரர் இடத்திற்கு ஆடம் கில்கிறிஸ்ட் ஒரு புதிய பெயரை பரிந்துரை செய்திருக்கிறார்.
தற்போது இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய பிரச்சினையாக இருந்து வந்தது துவக்க இடத்தில் யாரை களம் இறக்குவது என்பதுதான். ஏனென்றால் டேவிட் வார்னர் இடத்தில் அனுப்பப்பட்ட ஸ்மித் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை.
புதிதாக அறிவிக்கப்பட்ட ஆஸ்திரேலியா துவக்க ஆட்டக்காரர்
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு ஆஸ்திரேலியா அணி காலை அறிவிக்கப்பட்டது. இதில் துவக்க ஆட்டக்காரர் இடத்திற்கு ஆஸ்திரேலியா ஏ அணியின் கேப்டன் நாதன் மெக்ஸ்வீனே தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். மார்க்கஸ் ஹாரிஸ் அல்லது சாம் கான்டஸ் இருவர் பெயரும் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் துவக்க ஆட்டக்காரர் இடத்திற்கு தற்போது தேர்வு செய்திருக்கும் வீரரை விட இன்னொரு வீரர் தான் சரியாக இருப்பார் என்றும், ஆஸ்திரேலியா பாரம்பரிய அணுகுமுறை படியே அணியை தேர்வு செய்ய வேண்டும் எனவும் ஆடம் கில்கிறிஸ்ட் வலியுறுத்தி இருக்கிறார்.
நம் பாரம்பரிய முறைப்படி செயல்பட வேண்டும்
இது குறித்து ஆடம் கில்கிறிஸ்ட் கூறும்பொழுது “தற்போது ஆஸ்திரேலியா அணியில் ஜோஸ் இங்லீஷ் ஒரு ரிசர்வ் பேட்டராக இருக்கிறார். உள்நாட்டு தொடர்களில் ஆஸ்திரேலியா பாரம்பரியத்தின் படி இப்படி செய்வது கிடையாது. மெக்ஸ்வீனி துவக்க வீரராக இருப்பார் என்று நான் நினைக்கிறேன். ஆனால் எங்களின் ஆறு சிறந்த பேட்ஸ்மேன்கள் முதல் ஆறு இடங்களில் இருக்க வேண்டும் என்ற கொள்கையில் தற்போது உள்ளவர்கள் உறுதியாக இருக்கிறார்களா? என்று தெரியவில்லை”
“உண்மையில் எங்கள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் இந்த பாரம்பரிய கொள்கையில் உறுதியாக இருந்தால், நான் முதல் ஆறு பேட்ஸ்மேன்களில் ஜோஸ் இங்லீசை வைப்பதுடன் அவரையே துவக்க ஆட்டக்காரர் ஆகவும் கொண்டு வருவேன். இது ஒரு சவாலாக இருக்கும் என நான் நினைக்கவில்லை”
இதையும் படிங்க : இந்திய அணி ஆஸியை வீழ்த்தி.. உறுதியா கோப்பையை வெல்லும்.. காரணம் இதுதான் – அஜய் ஜடேஜா விளக்கம்
“மெக்ஸ்வீனி நல்ல டைமிங் கொண்ட பேட்ஸ்மேன். எனவே அவர் துவக்க இடத்திற்கு சரியானவராக இருப்பார் என அவர்கள் நினைக்கிறார்கள். அதே சமயத்தில் ஜோஸ் இங்லீஷ்க்கு எப்படி தாக்கி விளையாடுவது? என்று தெரியும். தாக்கி விளையாடுவதுதான் அவருடைய தற்காப்பு ஆட்டமாகவும் இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.






