ஆரம்பமே அதிரடி.. 2 உலக சாதனைகளை படைத்த கேப்டன் ரோகித் சர்மா.. மும்பையில் சரவெடி!

0
1751
Rohit

தற்பொழுது ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மும்பை மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வது என தீர்மானித்தார். இந்திய அணியில் கடந்த போட்டியில் இருந்து எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. நியூசிலாந்து அணியும் எந்த மாற்றங்களும் செய்யப்படாமல் களம் இறங்கி இருக்கிறது.

- Advertisement -

மும்பை மைதானத்தை பொருத்தவரை முதலில் பேட்டிங் செய்வது மிகவும் முக்கியமான ஒன்று. முதலில் பேட்டி செய்யும் பொழுது பந்து பெரிய அளவில் அசையாது. பேட்டிங் செய்ய எளிமையாக இருக்கும். அதே சமயத்தில் இரண்டாவது பேட்டிங் செய்யும்பொழுது குறைந்தது 20 ஓவர்களில் பந்தில் அசைவு இருக்கும். இதைத் தாக்குப் பிடிப்பது மிகுந்த கடினம்.

இந்த நிலையில் இந்திய அணி டாசை வென்று மிகவும் பாதுகாப்பான முடிவை எடுத்து முதலில் பேட்டிங் செய்ய ஆரம்பித்தது. இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கில் என இருவரும் துவக்கம் தர வந்தார்கள்.

இந்த உலகக் கோப்பை முழுக்க அதிரடியான துவக்கத்தை தந்து எதிரணி பந்துவீச்சை முடக்கி போட்டு, மற்ற பேட்ஸ்மேன்களின் வேலையை எளிதாக்குவதை ரோகித் சர்மா வழக்கமாக வைத்திருக்கிறார்.

- Advertisement -

ரோகித் சர்மா இந்த வழக்கத்தை இந்த போட்டியிலும் மாற்றாமல் மிக அதிரடியான முறையில் விளையாட ஆரம்பித்தார். சவுதி, ட்ரெண்ட் போல்ட் இருவரின் ஓவர்களிலும் மூன்று சிக்ஸர்களை பறக்க விட்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் புதிய சாதனையை படைத்திருக்கிறார்.

ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்கின்ற சாதனையை படைத்திருக்கிறார். இதுவரையில் அவர் மொத்தம் 51 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார்.

ரோகித் சர்மா – 51
கிறிஸ் கெயில் – 49
கிளன் மேக்ஸ்வெல் – 43
டேவிட் வார்னர் – 37
ஏபி டிவிலியர்ஸ் – 37

ஒரு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அதிக சிக்ஸர்கள் எடுத்தவர் என்கின்ற சாதனையையும் படைத்திருக்கிறார்.

27 – ரோஹித் சர்மா 2023
26 – கிறிஸ் கெயில் 2015
22 – மோர்கன் 2019
22 – கிளன் மேக்ஸ்வெல் 2023
21 – ஏ பி டிவில்லியர்ஸ் 2015
21 – குயிண்டன் டி காக் 2023