41 பந்தில் அதிரடி சதம்.. சூப்பர் கிங்ஸை காப்பாற்றிய கிளாசன்.. மும்பை இந்தியன்ஸ் போராடி தோல்வி!

0
4559
MLC2023

தற்போது அமெரிக்காவில் ஆறு அணிகளை கொண்டு மேஜர் லீக் கிரிக்கெட் என்ற பெயரில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. டி20 கிரிக்கெட் வடிவம் கிரிக்கெட்டை உலகெங்கும் கொண்டு சேர்த்திருக்கிறது என்பதற்கு இதுவே நல்ல உதாரணம்!

இந்தத் தொடரில் ஐபிஎல் தொடரில் அணிகளை வாங்கி உள்ள சென்னை மும்பை கொல்கத்தா மற்றும் டெல்லி அணி நிர்வாகங்கள் நான்கு அணிகளை வாங்கி உள்ளன. மீதமுள்ள இரண்டு அணிகளை அமெரிக்க நிறுவனங்கள் வாங்கியிருக்கின்றன.

- Advertisement -

ஆறு அணிகளும் மற்ற அணிகளுடன் ஒரு முறை மோதும். பின்பு புள்ளி பட்டியலில் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். பிளே ஆப் சுற்று ஐபிஎல் தொடர் போலவே நடத்தப்படும்.

ஐந்து ஆட்டங்களை விளையாடி முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்திலும், வாஷிங்டன் பிரீடம் அணி புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்திலும் இருந்தன. நான்கு ஆட்டங்களை மட்டும் விளையாடி சீட்டில் ஆர்கஸ் அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி புள்ளி பட்டியலில் நான்காவது இடத்திலும் இருந்தன.

இந்த நிலையில் மீதமிருக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி வெல்லும் பட்சத்தில் ரன் ரேட் அடிப்படையில், புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு கூட முன்னேறும் வாய்ப்பு இருந்தது. இதனால் சூப்பர் கிங்ஸ் முதல் இரண்டு இடங்களில் இருந்து இறங்க வேண்டிய நிலை இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய நேரப்படி இன்று காலையில் நடைபெற்ற போட்டியில் சீட்டில் ஆர்கஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணியும் மோதிக்கொண்டன. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற சீட்டில் ஆர்கஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிக்கு
துவக்கம் தர வந்த சயான் ஜஹாங்கீர் 19, மோனக் படேல் 2, ஹமாத் அஸம் 2 ரண்களில் வெளியேறினார்கள். இதற்கு அடுத்து சர்வதேச வீரர்கள் நிக்கோலஸ் பூரன் மற்றும் கேப்டன் கீரன் பொல்லார்ட் இருவரும் இணைந்து அணியை மீட்டெடுத்தார்கள்.

மிகச் சிறப்பாக விளையாடிய பூரன் 34 பந்தில் மூன்று பவுண்டரி ஏழு சிக்ஸர் உடன் 68 ரன்கள் குவித்தார். கேப்டன் பொல்லார்ட் 18 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 34 ரன்கள் எடுத்தார். டிம் டேவிட் இந்த முறை 16 பந்துகள் விளையாடி ஒரு பவுண்டரி ஒரு சிக்ஸர் உடன் 18 ரன்கள் மட்டுமே எடுத்தார். டேவிட் விசா 13 பந்தில் 19 ரன்கள் எடுத்தார்.

20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது. வீட்டில் ஆர்கஸ் அணிதரப்பில் இமாத் வாசிம் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இதற்கு அடுத்து பெரிய இலக்கை நோக்கி விளையாட ஆரம்பித்த சீட்டில் ஆர்கஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் ஒருவரான சர்வதேச அனுபவ வீரர் குயிண்டன் டி காக் 9 ரன்களிலும், சேக்கான் ஜெயசூர்யா ரன் இல்லாமலும், சுபாம் ரஞ்சனே 7 ரன்களிலும், டசன் சனக்கா 10 ரன்களிலும் பின்பு வந்து வெளியேறினார்கள்.

ஆனால் சீட்டில் ஆர்கஸ் அணியின் மற்றொரு துவக்க ஆட்டக்காரர் நவ்மான் அன்வர் அதிரடி காட்டிய தென் ஆப்பிரிக்காவில் ஹென்றி கிளாஸசனுக்கு மிகச் சிறப்பான ஒத்துழைப்பை தந்து 30 பந்துகளில் ஆறு பவுண்டரி மூன்று சிக்ஸர்கள் உடன் 51 ரன்கள் எடுத்தார்.

இன்னொரு பக்கத்தில் ஹென்றி கிளாசன் அற்புதமான ஆட்டத்தை அரை சதம் தாண்டி வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். இந்த நிலையில் 18ஆவது ஓவரை வீச வந்த ட்ரெண்ட் போல்ட், அந்த ஓவரின் முதல் பந்தில் பிரிட்டோரியஸ், இரண்டாவது பந்தில் இமாத் வாசிம், நான்காவது பந்தில் ஹர்மீத் சிங் என அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி, ஐந்து விக்கெட் இழப்புக்கு நல்ல நிலையில் இருந்த சீட்டில் ஆர்கஸ் அணியை எட்டு விக்கெட்டுகளுக்கு இழுத்து வந்து விட்டார்.

இந்த நிலையில் கடைசி இரண்டு ஓவர்களுக்கு வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. அப்பொழுது ஹென்றி கிளாசன் உடன் ஆண்ட்ரூ டை களத்தில் இருந்தார். 19ஆவது ஓவரில் கிளாஸ் இரண்டு பவுண்டரிகள் அடிக்க அவருக்கு 41 பந்தில் அற்புதமான சதம் வந்தது. மேலும் அந்த ஓவரில் 10 ரன்கள் வந்தது.

இதற்கு அடுத்து கடைசி ஓவரின் முதல் பந்தில் டை ஒரு ரன் எடுக்க, இரண்டாவது பந்தை சந்தித்த கிளாசன் சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற செய்து, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை தக்கவைக்க வைத்தார். இறுதிவரை களத்தில் நின்ற கிளாசன் 44 பந்துகளில் 9 பவுண்டரி 7 சிக்ஸர்கள் உடன் 110 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து சூப்பர் கிங்ஸ் அணியின் இரண்டாவது இடம் தப்பித்தது. மேலும் நேரடியான இறுதிப் போட்டிக்கான ஆட்டத்தில் சீட்டில் ஆர்கஸ் அணியை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்ள இருக்கிறது. இந்த வருடத்தில் சூப்பர் கிங்ஸ் அணிக்கு இரண்டாவது டி20 தொடர் பட்டம் கிடைக்குமா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.