2025ஆம் ஆண்டு18வது ஐபிஎல் சீசனுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சில புதிய கட்டுப்பாடுகளை விதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு பிறகு இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய வீரர்களுக்கு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக வீரர்களின் குடும்பத்தினர் குறைந்த நாட்கள் மட்டுமே வீரர்களுடன் தங்க முடியும், வீரர்கள் அணி பேருந்தில் மட்டுமே பயணிக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் மிக முக்கியமானவையாக பார்க்கப்பட்டது.
தற்போது இந்திய கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தொடருக்கும் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதில் மிக முக்கியமாக வீரர்கள் அனைவரும் அணி பேருந்தில் மட்டுமே பயணிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது. மேலும் வீரர்கள் இரண்டு பகுதிகளாக அணி பேருந்தில் பயணிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
மேலும் வீரர்கள் அணி பேருந்தில் பயணிக்கும் பொழுது அவரது குடும்பத்தினருக்கு அனுமதி இல்லை என்றும் கூறப்பட்டிருக்கிறது. மேலும் வீரர்களின் குடும்பத்தினர் ஹாஸ்பிட்டாலிட்டி பாக்சில் இருந்து போட்டிகளை பார்த்துக் கொள்ளலாம். ஆனால் அவர்கள் வீரர்கள் இருக்கும் அறைக்கு செல்ல முடியாது என்கின்ற புதிய விதியும் வருகிறது.
தற்போது வீரர்களின் குடும்பத்தினர் ட்ரெஸ்ஸிங் ரூம், மூன்றாவது நடுவரின் அறை, மேட்ச் ரெப்ரி அறை, டக் அவுட், வீரர்கள் மற்றும் மேட்ச் அதிகாரிகள் உணவு உண்ணும் பகுதி ஆகியவற்றில் நுழைய அனுமதி கிடையாது என்று தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. இந்த கட்டுப்பாடுகள் மிகவும் உறுதியுடன் பின்பற்றப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க : நியூஸி டி20 தொடர்: பாகிஸ்தான் அணிக்கு புது கேப்டன் அறிவிப்பு.. பாபர் அசாம் மற்றும் ரிஸ்வான் டீமிலிருந்தே நீக்கம்
மேலும் பயிற்சிக்கான த்ரோ டவுன் பந்து வீசக்கூடியவர்கள் பட்டியலை முன்கூட்டியே இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அணிகள் கொடுக்க வேண்டும். அவர்கள் யார் என்பதை பார்த்து இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதி செய்யும். மேலும் போட்டி அல்லாத நாட்களுக்கு இதற்கான அங்கீகாரம் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.