சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி படுமோசமாக விளையாடி முதல் சுற்றிலே ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் வெளியேறி இருக்கிறது. 29 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் அணி தங்களது சொந்த மண்ணில் ஐசிசி தொடரை நடத்தியது.
இதில் பாகிஸ்தான் வெற்றிபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் வழக்கம் போல் பாகிஸ்தான் அணி படுமோசமாக விளையாடினார்கள். குறிப்பாக இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் இந்தியாவை ஆதிக்கம் செலுத்தியது.
ரிஸ்வான் , பாபர் அசாம் நீக்கம்:
இந்த தொடரில் கேப்டன் ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் ஆட்டம் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் வரும் மார்ச் 16ஆம் தேதி பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்த தொடருக்கான அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த முகமது ரிஸ்வான் அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்கு பதில் சல்மான் ஆகா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் டி20 போட்டிகளில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்கள்.
வரும் செப்டம்பர் மாதம் ஆசிய கோப்பை டி20 தொடரும் 2026 டி20 உலக கோப்பை தொடரையும் மனதில் வைத்தே இந்த மாற்றங்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செய்திருப்பதாக தெரிகிறது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், முஹம்மது ரிஸ்வான் தொடர்ந்து ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக தொடர்வார்.
பாகிஸ்தான் டி20 அணி விவரம்:
2027 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியை ரிஸ்வான் கட்டமைப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டி20 போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் அப்துல் சமத், ஹசன் நவாஸ் மற்றும் முகமது அலி என மூன்று அறிமுக வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: ஹெட் கேச்சை பிடித்த கில்.. எச்சரித்த கள நடுவர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் ஹைடன் – நடந்தது என்ன?
சல்மான் அலி ஆகா (கேப்டன்), ஷதாப் கான் (துணை கேப்டன்), அப்துல் சமத், அப்ரார் அகமது, ஹாரிஸ் ரவுஃப், ஹசன் நவாஸ், ஜஹந்தத் கான், குஷ்தில் ஷா, முகமது அப்பாஸ் அப்ரிடி, முகமது அலி, முகமது ஹாரிஸ், முஹம்மது இர்பான் கான், ஷாகின் ஆப்ரிடி, உமைர் பின் யூஸ் கான், சூபியான் மோகிம், உஸ்மான் கான்






