18வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழா மார்ச் மாதம் நடைபெற உள்ள நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணி சமீபத்தில் நடைபெற்ற மெகா ஏலத்தில் சிறந்த வீரர்களை வாங்கி அணியை வலுபடுத்தி உள்ளது.
இந்த சூழ்நிலையில் குஜராத் அணியின் தலைமை இயக்க அதிகாரி அரவிந்தர் சிங் சுப்மான் கில் கேப்டனாக நியமிக்கப்பட்ட விதம் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
ஜிடி அணியின் புதிய கேப்டன்
கடந்த 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிய அணியாக அறிமுகப்படுத்தப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார். மற்ற அணிகளை காட்டிலும் வலு குறைந்த அணியாகவும் அதிக கேப்டன் அனுபவம் இல்லாத ஹர்திக் பாண்டியா அணியை எப்படி வழிநடத்த போகிறார் என்று பெரிய விமர்சனங்கள் இருந்தது. ஆனால் அத்தனைக்கும் பதிலடி கொடுத்து அறிமுகமான முதல் சீசனிலேயே ஐபிஎல் கோப்பையை வென்று வரலாறு படைத்தது.
இந்த சூழ்நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற நிலையில் அவருக்கு அடுத்ததாக சுப்மான் கில் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இருப்பினும் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் சில போட்டிகளில் வெற்றி பெற்று தொடரில் இருந்து வெளியேறியது. இந்த நிலையில் குஜராத் அணியின் தலைமை இயக்க அதிகாரி, கில் கேப்டனாக நியமிக்கப்பட்ட விதம் குறித்தும் ஹர்திக் பாண்டியா குறித்தும் சில முக்கியமான கருத்துகளை பேசி இருக்கிறார்.
அணி பதட்டம் அடையாது
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “2022 ஆம் ஆண்டு உங்களை அழைத்துச் செல்கிறேன். அப்போது குஜராத் அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டார். அப்போதும் இதே போன்ற விமர்சனங்கள் இருந்தன. அவர் இதற்கு முன்பு ஒருபோதும் கேப்டனாக இருந்ததில்லை. மக்கள் அவரது உடல் தகுதி குறித்து சந்தேகங்களை எழுப்பினார்கள். சில கேள்விகளும் இருந்தது. ஆனால் அந்த வேலைக்கு அவர் சரியானவர் என்று நாங்கள் நம்பினோம். அவர் அதை நிரூபித்தார். எனவே அது கில்லுக்கும் பொருந்தும். அவர் வளர்ந்து வரும் ஒரு இளம் வீரர்.
இதையும் படிங்க:தோனி குறித்துலாம் எனக்கு கவலை இல்லை.. ஏன்னா நான் கிரிக்கெட் ஆட வந்ததே இதுக்காகதான் – தினேஷ் கார்த்திக் பேட்டி
தலைமைத்துவ பண்புகள் வகுப்பறையில் கற்றுக் கொடுக்கப்படுவதில்லை. மைதானத்தில் தான் கற்றுக் கொள்ளப்படுகின்றன. மேலும் அவரைச் சுற்றி ஒரு வலுவான அமைப்பு உள்ளது. கில் கேட்டு விஷயங்களை தெரிந்து கொள்வதில் பண்பான வீரர். இதுதான் ஜீடியின் சாராம்சமும் கூட. ஒருவேளை சுப்மான் கில் வெளியேறினாலும் அணி பதற்றம் அடையாது. அவருக்கு பதிலாக வேறு யாராவது முன்வருவார்கள் கடந்த காலங்களில் நாம் இதை பார்த்திருக்கிறோம். ஒரு காலத்தில் நீக்கப்பட்ட வீரர்கள் குஜராத் அணிக்கு சாம்பியன்ஷிப் அல்லது சாம்பியன்ஷிப் வாய்ப்பை வழங்கியிருக்கிறார்கள். ஏனென்றால் வீரர்கள் தங்களது சிறந்த கிரிக்கெட்டை விளையாட நாங்கள் ஊக்குவிக்கிறோம், மீதமுள்ளவற்றை நாங்கள் கையாளுகிறோம்” என்று பேசியிருக்கிறார். இதன் மூலமாக ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாறியது குறித்து தனது மறைமுகமான விமர்சனத்தை சிஓஓ பதிவு செய்து இருக்கிறார்






