விராட் கோலி முன்னிலையில்.. மோர்கலை கண்டித்த கம்பீர்.. பிசிசிஐ தரப்பில் கசிந்த தகவல் – வெளியான செய்தி

0
294
Gambhir

இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கலை விராட் கோலி முன்னிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் கண்டித்ததாக பிசிசிஐ தரப்பில் செய்திகள் கசிந்து இருக்கிறது.

தற்போது இந்திய கிரிக்கெட்டில் மிகவும் குழப்பமான நிலை காணப்படுகிறது. கம்பீர் புதிய தலைமை பயிற்சியாளராக வந்த பிறகு இந்திய அணி பல முக்கியமான போட்டிகளில் தோல்வி அடைந்திருக்கிறது. குறிப்பாக கடைசியை எட்டு டெஸ்ட் போட்டிகளில் ஒரு டெஸ்ட் போட்டியை மட்டுமே இந்திய அணி வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மோர்கலை கண்டித்த கம்பீர்

ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் பயிற்சி முகாம் பொது ஒரு பந்துவீச்சு பயிற்சி அமர்வுக்கு மோர்னே மோர்கல் தாமதமாக வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் வேலையில் மிகவும் கண்டிப்புடன் இருக்கும் கம்பீர் மோர்னே மோர்கலை இதற்காக விராட் கோலி முன்னிலையில் கண்டித்ததாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இது சம்பந்தமாக இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அறிக்கை கொடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் குழு சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் தரத்தில் இருக்கிறதா? என்றும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறதாக கூறப்படுகிறது. குறிப்பாக பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் மற்றும் துணை பயிற்சியாளர் நெதர்லாந்தின் டென் டஸ்கட் ஆகியோரது பயிற்சியாளர் பதவி ஆபத்தில் இருப்பதாக தெரிகிறது.

- Advertisement -

பிசிசிஐ தரப்பில் கசிந்த தகவல்

இது சம்பந்தமாக வெளிவந்திருக்கும் செய்தியில் “தற்போது பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் மிக முக்கியமாக ஸ்கேனரில் இருந்து வருகிறார். கம்பீர் ஒரு சிறந்த பேட்டராக இந்திய அணிக்கு இருந்திருக்கிறார். அதே சமயத்தில் அபிஷேக் நாயருக்கு தேவையான அளவு சர்வதேச கிரிக்கெட் அனுபவம் எதுவும் கிடையாது. எனவே அவர் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு புதிதாக ஏதாவது விஷயங்களை கொண்டு வருகிறாரா? என இந்திய வீரர்களிடம் கேட்கப்பட்டுள்ளது”

இதையும் படிங்க : 303 ரன் குவித்தும் இடமில்லை.. இப்போது 5 சதங்கள்.. அந்த மைதான பால்கனியில் யோசித்தேன் – கருண் நாயர் பேட்டி

“இதைப் போலவே இன்னொரு துணை பயிற்சியாளர் டென் டஸ்கேட் சர்வதேச கிரிக்கெட் அனுபவம் அதிகம் இல்லாதவராக இருக்கிறார். தற்பொழுது இவரை அணியில் தொடர்வது குறித்தும் யோசிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் தரத்தை எவ்வாறு மேம்படுத்துவார்கள் என்கின்ற கேள்வி எழுந்திருக்கிறது?” என்று கூறப்பட்டிருக்கிறது.

- Advertisement -