இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்தும் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காத கருண் நாயர் மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு பெற்று விளையாட காத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக ஆட்டம் இழக்காமல் கருண் நாயர் 303 ரன்கள் எடுத்தார். அதற்குப் பிறகு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு போட்டியில் அவர் சரியாக விளையாடவில்லை. இதைத்தொடர்ந்து இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 2018 ஆம் ஆண்டு நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆறு போட்டிகள் ஐந்து சதங்கள்
தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபியில் மொத்தம் ஆறு போட்டிகளில் விளையாடிய 664 ரன்கள் குவித்திருக்கிறார். மேலும் இதில் ஐந்து சதங்கள் அடித்து அசத்தி இருக்கிறார். இதில் அவர் ஐந்து முறை ஆட்டம் இழக்காமலும் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவருடைய பேட்டிங் ஃபார்ம் உச்சத்தில் இருக்கிறது.
இது குறித்து பேசி இருக்கும் கருண் நாயர் கூறும் பொழுது ” நான் 2023 ஆம் ஆண்டு நார்த்தாம்டன்சையர் அணிக்காக இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட் விளையாட வந்தேன். அப்போது மூன்று சிறந்த கவுன்டி அணிகளுக்கு எதிராக விளையாட எனக்கு கிடைத்த வாய்ப்பை நான் இரண்டு கைகளாலும் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டேன். அப்போது நான் முதல் இன்னிங்ஸ் விளையாட ஓவல் மைதானத்தில் பால்கனியில் நின்றேன். இதே மைதானத்தின் பால்கனியில் நின்று தான் நான் அணியில் நீக்கப்பட்டது குறித்து யோசித்தேன். தற்போது வாழ்க்கை ஒரு வட்டமாக மாறி ஐந்து ஆண்டுகள் கழித்து அதே மைதான பால்கனியில் நின்றேன்”
இந்திய அணிக்கு திரும்பி வரவேண்டும்
“எனக்கு கவுன்டி கிரிக்கெட் மற்றும் விஜய் ஹசாரே டிராபி சிறப்பான முறையில் அமைந்திருக்கிறது. இந்திய அணியின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்பது பலரது கனவாக இருந்து வருகின்றது. ஏனென்றால் இது ஒரு அற்புதமான அமைப்பு. இதற்கு நானும் விதிவிலக்கு கிடையாது. நான் என்னுடைய நாட்டிற்காக விளையாட வேண்டும் என்று கனவு காண்கிறேன்”
இதையும் படிங்க : 21ஆம் நூற்றாண்டு.. ஆசிய டெஸ்ட் பிளேயிங் XI.. 5 இந்திய வீரர்களுக்கு இடம்.. அனில் கும்ப்ளே இல்லை
“நான் என் நாட்டிற்காக விளையாடுவேன் என்று நம்புகிறேன். இதற்காக நான் எதை செய்யவும் தயாராக இருக்கிறேன். ஒவ்வொரு சூழ்நிலைக்கு தகுந்தவாறு விளையாடி ரன்கள் குவிப்பது மட்டுமே என் கையில் இருக்கிறது. மற்ற எதுவும் என்னுடைய கையில் இல்லை. எனவே நான் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவிக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






