3வது டெஸ்ட்.. இந்திய அணியின் பயிற்சியில் 2 முக்கிய விஷயங்கள்.. கவலை தரும் செய்திகள்.. வெளியான தகவல்கள்

0
3138
Rohit

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பயிற்சி முகாமில் இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடைபெற்றிருக்கிறது.

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் வருகின்ற டிசம்பர் 14ஆம் தேதி பிரிஸ்பேன் காபா மைதானத்தில் துவங்க இருக்கிறது. நடந்து முடிந்த இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் ஒரு போட்டியை வென்று தொடர் சமநிலையில் உள்ளது.

- Advertisement -

பயிற்சியில் கிடைத்த பேட்டிங் வரிசை

இன்று மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான முதல் பயிற்சி அமர்வு ஆரம்பித்தது. இதில் ஒரு மகிழ்ச்சியான விஷயமாக கே.எல். ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் ஜோடியாக வந்து பயிற்சி பெற்றார்கள். இந்த ஜோடி பயிற்சியிலும் மாறாமல் அப்படியே தொடர்வது கவனிக்கத்தக்கதாக அமைந்திருக்கிறது.

இதன் மூலம் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியின் தொடக்க ஜோடியாக இவர்கள் இருவருமே இருப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது. ஆஸ்திரேலியா சூழ்நிலையில் ரோஹித் சர்மாவை விட கேஎல்.ராகுல் நல்ல நிலையில் இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -

கவலை தரும் பவுலிங் யூனிட் செய்தி

இன்றைய முதல் பயிற்சி அமர்வில் இந்திய பந்துவீச்சு பிரிவில் இருந்து வேகப் பந்துவீச்சாளர்கள் பொம்பரா மற்றும் சிராஜ் இருவரும் கலந்து கொள்ளவில்லை. இவர்கள் இருவருமே பனிச்சுமையின் காரணமாக இன்றைய பயிற்சியை புறக்கணித்து இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது. அணி நிர்வாகம் அவர்களுக்கு பயிற்சியில் இருந்து பணிச்சுமை காரணமாக ஓய்வு கொடுத்திருக்கிறது.

இதையும் படிங்க : விராட் கையில்தான் இந்த விஷயம் இருக்கு.. பும்ராவுக்கு கேப்டன் பதவி வேண்டாம் – கபில் தேவ் கருத்து

அதே சமயத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு தொடைப்பகுதியில் சிறிது தசைப்பிடிப்பு ஏற்பட்டது.மேலும் ஆஸ்திரேலியாவின் இரண்டாவது இன்னிங்ஸின் போது ஒரு ஓவர் வீசிய பும்ரா பந்தை மிகவும் மெதுவாகவே வீசி முடித்தார். எனவே இந்திய அணியின் பொறுப்புச் சீட்டான அவரது உடல் தகுதி எந்த அளவில் இருக்கிறது என்பது குறித்து கவலை தற்போது இந்திய மட்டத்தில் நிலவி வருகிறது. மேலும் ஷமி அணியில் எப்போது இணைவார் என்கின்ற தெளிவு இல்லாததும் கவலையை தருகிறது.

- Advertisement -