நேற்று ஹைதராபாத் வீரர் அபிஷேக் சர்மா பஞ்சாப் அணிக்கு எதிராக 55 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 141 ரன்கள் போயிட்டார். இந்த போட்டியை நேரில் பார்த்த அவருடைய தந்தை தற்போது தனக்கு தன் மகன் குறித்து ஒரு மூடநம்பிக்கை சுத்தமாக போய்விட்டது என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணிக்கு அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் 82 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். 20 ஓவர்களில் பஞ்சாப் அணி 245 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய ஹைதராபாத் அணி அபிஷேக் ஷர்மா அதிரடியால் 18.2 ஓவரில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.
கடந்த ஐபிஎல் சீசனில் ஹைதராபாத் அணிக்கு 200க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில் 400க்கும் மேற்பட்ட ரன்களை அபிஷேக் சர்மா குவித்து அனைவருக்கும் கவனத்தையும் திருப்பி இருந்தார். இதன் காரணமாக இந்திய டி20 அணியில் வாய்ப்பு கிடைக்க, தற்போது அவர் இந்திய டி20 அணியின் நிரந்தர துவக்க ஆட்டக்காரர் போல தனது இடத்தை உறுதி செய்திருக்கிறார்.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் அவருக்கு ஆரம்பம் இந்த ஆண்டு சிறப்பாக அமையவில்லை. மிகவும் தடுமாற்றத்துடன் ஆரம்பித்து வந்தார். இதன் காரணமாக அவருடைய அணியும் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்தது. இந்த நிலையில் தான் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்த நிலையில்தான் சாதனை சதத்தை அடித்திருக்கிறார்.
இந்த நிலையில் தன் மகன் பேட்டிங் குறித்து பேசி இருக்கும் அபிஷேக்சர்மா தந்தை கூறும் பொழுது ” எனது மகன் விளையாடுவதை நான் நேரில் மைதானத்தில் சென்று பார்த்தல் அவன் சீக்கிரத்தில் ஆட்டம் இழந்து விடுவான் என்கின்ற மூடநம்பிக்கை எனக்கு தொடர்ந்து இருந்து வந்தது. இந்த நிலையில் தான் இந்த போட்டிக்கு என்னை மிகவும் போராடி சம்மதிக்க வைத்து அபிஷேக் சர்மா அழைத்து வந்தார்”
இதையும் படிங்க : தோனி நாளைக்கு இந்த பிடிவாதத்தை விடனும்.. லக்னோ கூட இதை செஞ்சு தோத்துப்போங்க பரவால்ல.. ரசிகர்கள் வேண்டுகோள்
“நான் அதே மனநிலையில் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது அவர் ஆட்டம் இழந்தார். நான் நினைத்தது போலவே நடந்து விட்டது வந்திருக்கக் கூடாது என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் நோ-பால் என்ற அறிவிப்பு வந்ததும் எல்லாம் மாறியது. நான் இப்பொழுது இந்த மூடநம்பிக்கையை கைவிட்டு விட்டேன். இனி அபிஷேக் ஷர்மா பார்முக்கு வந்துவிட்டார் அவர் அணியும் தொடர்ந்து வெற்றிகளை குவிக்கும்” என்று கூறி இருக்கிறார்