கம்பீர் ODI சீரிஸ்ல விராட் ரோகித்துக்கு எந்த கிரெடிட்டும் கொடுக்கல.. அத பாக்கவே விசித்திரமா இருந்துச்சு-ராபின் உத்தப்பா பேச்சு

0
34
Uthappa

தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடர் முடிவில் கம்பீர் விராட் கோலி மற்றும் போது சர்மாவுக்கு எந்த கிரெடிட்டும் கொடுக்கவில்லை என ராபின் உத்தப்பா விமர்சனம் செய்திருக்கிறார்.

கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ராபின் உத்தப்பா முக்கிய பேட்ஸ்மேனாக விளையாடியவர். எப்பொழுதும் கம்பீருக்கு ஆதரவாகவே பேசி வந்தவர். இந்த நிலையில் திடீரென அவர் கம்பீரை விமர்சித்து பேசி இருப்பது பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

விராட் கோலி ரோகித் சர்மா சம்பவம்

ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடர்களில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் மிகச் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்றார்கள். அவர்கள் மீது இருந்த சந்தேகத்திற்கு முழுமையாக பதில் அளித்து இருக்கிறார்கள். இறந்தபோதிலும் இன்னும் 2027ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இருவரும் விளையாடுவது உறுதி செய்யப்படவில்லை.

இந்த நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரை தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக வென்ற பிறகு ருதுராஜ் மற்றும் ஜெய்ஸ்வால் இதுவரை மட்டும் பாராட்டிவிட்டு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா குறித்து எதுவும் பெரிதாக பேசவில்லை. அவர்கள் உலகக் கோப்பையில் விளையாடுவது குறித்தான கேள்வியையும் கடந்து சென்றார்.

- Advertisement -

விசித்திரமாக இருக்கிறது

இதுகுறித்து ராபின் உத்தப்பா பேசும் பொழுது “தென் ஆப்பிரிக்கா ஒருநாள் தொடர் முடிவடைந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பில் கம்பீர் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு எந்த கிரெடிட்டும் கொடுக்கவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இவர்கள் இருவரும் தங்களுடைய முழுமையான திறனில் பேட்டிங் செய்து, எவ்வளவு திறமையானவர்கள் என்றும், எவ்வளவு உயரத்திற்கு செல்ல முடியும் என்றும் காட்டியவர்கள்”

இதையும் படிங்க : கம்பீர் சொல்ற அந்த ஒரு விஷயத்தை கொஞ்சம் ஏத்துக்குறேன்.. ஆனா முழுசா அப்படி செய்ய முடியாது – ஏபி டிவில்லியர்ஸ் பேச்சு

“அவர்கள் மீது இருந்த எல்லா சந்தேகத்தையும் அழித்து விட்டார்கள். இவர்கள் இந்தியாவுக்காக என்ன செய்ய முடியும் மேலும் பார்மில் இருந்தால் என்ன செய்ய முடியும் என்பதற்கு பெரிய பதில் கொடுத்தவர்கள். அப்படிப்பட்டவர்கள் குறித்து பாராட்டி கம்பீர் எதுவும் சொல்லவில்லை. உண்மையில் இது எனக்கு மிகவும் விசித்திரமாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -