நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 24 பந்துகளில் அதிரடி அரை சதம் அடித்து இந்திய அணியை அபிஷேக் சர்மா வெல்ல வைத்து ஆட்டநாயகன் விருது வென்றார். போட்டிக்கு பிறகு இந்த ஆட்டம் குறித்து பேசி இருக்கிறார்.
இந்திய அணி இரண்டாவது சுற்றில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. பாகிஸ்தானில் இந்த முறை மூன்று வேகப்பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்கியது.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் பர்கான் 45 பந்தில் 58 ரன் எடுத்தார். பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாட வந்த இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் அபிஷேக் சர்மா மற்றும் கில் இடம் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் வாய்த் தகராறு செய்ய ஆரம்பித்தார்கள்.
அதேசமயத்தில் அபிஷேக் ஷர்மா அதிரடியில் மிரட்டி 39 பந்தில் 74 ரன்கள் குவித்தார். இன்னொரு முனையில் துணை கேப்டன் கில் அதிரடியாக 28 பந்தில் 47 ரன்கள் எடுத்தார். ஒரு ஓவர் மீதம் வைத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக பாகிஸ்தான் அணியை வென்றது.
இந்தப் போட்டி குறித்து அபிஷேக் ஷர்மா பேசும் பொழுது ” பாகிஸ்தான் வீரர்கள் காரணம் இல்லாமல் எங்களிடம் வந்து கொண்டிருந்தது எனக்கு பிடிக்கவில்லை. அதனால்தான் திருப்பி எதிர்த்தேன். அதன் காரணமாக அணிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நானும் இன்னும் பள்ளி வயதிலிருந்து ஒன்றாக விளையாடுகிறோம். நாங்கள் ஒருவரை ஒருவர் ரசித்து விளையாடுகிறோம்”
இதையும் படிங்க : நீரும் நெருப்பும் மாதிரி பசங்க கில்லும் அபிஷேக்கும்.. பும்ரா ரோபோ கிடையாது – சூரியகுமார் பேச்சு
“மேலும் இன்று நாங்கள் அணிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்தோம். இன்று கில் விளையாடிய விதம் எனக்கு மிகவும் பிடித்தது. யாராவது தைரியமாக விளையாடினால் அதற்குப் பின்னணியில் அணி நிர்வாகம் அவர்களை ஆதரிப்பது தான் காரணமாக இருக்கும். என்னை அணி நிர்வாகம் நன்றாக ஆதரிக்கிறது. நான் மிகவும் கடினமாக பயிற்சி செய்கிறேன். அன்றைய நாள் என்னுடையதாக இருந்தால் அணியை வெற்றி பெற வைத்து விடுவேன்” என்று கூறியிருக்கிறார்.