2007ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் அணி இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளதால் பிசிசிஐ அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்துள்ளது.
இந்த பரிசுத் தொகையில் அணி வீரர்கள், பயிற்சியாளர், துணை பயிற்சியாளர் என அனைவருக்கும் எவ்வளவு கோடிகள் சென்றடையும் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு பிறகு ரோகித் சர்மா தலைமையில் உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்துள்ள நிலையில், மகிழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வாரியம் 125 கோடி பரிசுத்தொகையாக அறிவித்தது. அதற்கான அதிகாரப்பூர்வ சான்றிதழை சமீபத்தில் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற வெற்றி விழாவில் இந்திய அணிக்கு வழங்கியது.
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின் படி, 125 கோடி பரிசுத் தொகையில் இந்திய அணியில் விளையாடிய 11 வீரர்கள் மற்றும் விளையாடாத நான்கு வீரர்கள் உட்பட மொத்தம் 15 வீரர்களுக்கு தலா 5 கோடி ரூபாய் வழங்குகிறது. அதுமட்டுமல்லாமல் அணியின் தலைமை பயிற்சியாளர் டிராவிட், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பந்து வீச்சு பயிற்சியாளர் மாம்ப்ரே, பீல்டிங் பயிற்சியாளர் திலீப் என மூன்று பேருக்கும் தலா 2.5 கோடி ரூபாய் வழங்க உள்ளது.
இதைத் தொடர்ந்து இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட், மசாஜ் தெரபிஸ்ட், த்ரோ டவுன் பயிற்சியாளர் மற்றும் ஸ்ட்ரென்த் கண்டிஷனிங் நிபுணர் என மொத்தமாக பத்து பேருக்கு தலா இரண்டு கோடி ரூபாய் வழங்க உள்ளது. அது மட்டுமல்லாமல் இந்திய அணியில் ரிசர்வ் வீரர்களாக இடம் பிடித்த ரிங்கு சிங், சுப்மான் கில், கலீல் அகமது மற்றும் ஆவேஸ் கான் ஆகிய நான்கு பேருக்கும் தலா ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகையாக அறிவித்திருக்கிறது.
இதில் குறிப்பாக கவனிக்கப்பட வேண்டிய ரிசர்வ் வீரரான ரிங்கு சிங் டி20 உலக கோப்பையில் இந்திய அணி அறிவிக்கப்பட்ட அப்போது 15 பேர் கொண்ட அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அணியில் இடம் பெறாமல் ரிசர்வ் வீரர்களின் பட்டியலில் இடம் பிடித்தது அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. இருப்பினும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியுடன் பயணம் மேற்கொண்ட ரிங்கு சிங் தொடர் முழுவதும் இந்திய அணியுடனே பயணம் செய்தார்.
இதையும் படிங்க:மொக்க பிட்ச்.. அதான் ஐபிஎல் இந்திய பசங்க கலக்குறாங்க – பாகிஸ்தான் ஜுனைட் கான் விமர்சனம்
15 பேர் கொண்ட டி20 உலக கோப்பை அணியில் காயம் ஏதேனும் வீரருக்கு காயம் ஏற்படும் பட்சத்தில் மாற்றுவீராக ரிங்கு சிங் தயாராக இருந்தார். ஆனால் அவருக்கு ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் இந்திய அணி நல்ல வேலையாக உலக கோப்பையை வென்றது. ரிங்கு சிங் உட்பட ரிசர்வ் பட்டியலில் இடம் பெற்றிருந்த நான்கு வீரர்களும் விளையாடாமலே தற்போது ஒரு கோடி ரூபாய் பரிசாக பெறுகின்றனர்






