இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அபிஷேக் சர்மா 14 பந்தில் அரை சதம் அடித்து ருத்ர தாண்டவம் ஆடினார். இந்த நிலையில் அவரது பேட்டிங் குறித்து போட்டி முடிவுக்கு பிறகு பேசி இருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா ஆட்டம் இழக்காமல் 20 பந்தில் 68 ரன்கள், கேப்டன் சூரியகுமார் யாதவ் 26 பந்தில் 57 ரன்கள் எடுத்து 10 ஓவரில் இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்கள். மேலும் அபிஷேக் சர்மா தான் சந்தித்த முதல் பந்தில் சிக்ஸர் அடித்தார்.
இந்த போட்டி குறித்து அபிஷேக் ஷர்மா கூறும் பொழுது “நான் இன்று 14 பந்துகளில் அரை சதம் அடித்தேன் இப்படிப்பட்ட இன்னிங்சைதான் என்னிடமிருந்து அணி எதிர்பார்க்கிறது. அதை நான் சரியாக எக்ஸிகியூட் செய்ய பார்க்கிறேன். ஆனால் அதை ஒவ்வொரு முறையும் செய்வது எளிதானது கிடையாது. இது மனநிலை சம்பந்தப்பட்டது. மேலும் டிரெஸ்ஸிங் ரூம் சூழலும் முக்கியமானது”
“யுவராஜ் சிங் 12 பந்தில் அதிவேகமாக அரை சதம் அடித்திருக்கிறார். அது யாரும் செய்ய முடியாதது போல தோன்றும். ஆனால் அதையும் யாராவது முறியடிக்கலாம், சொல்ல முடியாது. இந்த தொடரில் எல்லா பேட்ஸ்மேன்களும் மிகவும் அதிரடியாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். மிகவும் வேடிக்கையாக சென்று கொண்டிருக்கிறது”
“நான் முதல் பந்தில் சிக்சர் அடிக்க திட்டமிட்டு செல்வேன் என்பதெல்லாம் கிடையாது. அது நடுவில் உண்டாகிற உள்ளுணர்வுதான். ஒரு பவுலர் என்னை முதல் பந்தில் ஆட்டம் இழக்க வைக்க முயற்சி செய்தால், அப்படி எனக்கு தோன்றினால், அவர் எனக்கு எப்படிப்பட்ட பந்தை வீசுவார் என்று யூகித்து அதன்படி செய்வேன்”
இதையும் படிங்க : 10 ஓவரில் துவம்சம்.. அபிஷேக் சர்மாவின் சாதனை அதிரடி.. சூரியகுமார் சரவெடி.. இந்திய அணி தொடரை வென்றது
“நான் லெக் சைட் இறங்கி வந்து ஆப் சைட் அடிப்பது முழுக்க முழுக்க ஃபீல்டிங் எப்படி நிறுத்தப்பட்டு இருக்கிறது என்பதை பொறுத்ததுதான். ஒருவேளை லெக் சைடில் பில்டிங் இல்லாமல் இருந்தால் நான் அப்படி செல்ல மாட்டேன். நான் அப்படி வரும்பொழுது எனக்கு ஆப் சைடு முழுக்கவும் திறந்திருப்பது போல இருக்கும். எனவே நான் அதை பயன்படுத்திக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.