10 ஓவரில் துவம்சம்.. அபிஷேக் சர்மாவின் சாதனை அதிரடி.. சூரியகுமார் சரவெடி.. இந்திய அணி தொடரை வென்றது

0
7
Abhishek

இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் அபிஷேக் சர்மாவின் அசாதாரண அதிரடியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட இந்த 20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளை வென்று இருந்தது. மூன்றாவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அர்ஸ்தீப் சிங் மற்றும் வருண் சக்கரவர்த்திக்கு ஓய்வு கொடுத்து பும்ரா மற்றும் ரவி பிஸ்னாய் இருவரும் உள்ளே வந்தார்கள்.

- Advertisement -

நியூசிலாந்து திணறல்

இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த நியூசிலாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் கான்வே 2 பந்தில் 1 ரன், டிம் செப்பர்ட் 11 பந்தில் 12 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். அடுத்து வந்த ரச்சின் ரவீந்தரா 5 பந்தில் 4 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதற்கு அடுத்து வந்த பிலிப்ஸ் 40 பந்தில் 48 ரன்கள் சாப்மேன் 23 பந்தில் 32 ரன், கேப்டன் சான்ட்னர் 17 பந்தில் 27 ரன்கள் எடுத்தார்கள். நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் பந்துவீச்சில் உம்ரா 3 மற்றும் ரவி பிஷ்னாய், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

அபிஷேக் சர்மா அதிரடி

இதைத்தொடர்ந்து விளையாட வந்த இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் முதல் பந்திலேயே டக்அவுட் ஆனார். இதற்கு அடுத்து வந்த இஷான் கிஷான் அதிரடியாக விளையாடி 14 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த அபிஷேக் ஷர்மா மற்றும் சூரிய குமார் யாதவ் இருவரும் அதிரடியில் மிரட்டினார்கள்.

சிறப்பாக விளையாடிய அபிஷேக் ஷர்மா 14 பந்தில் அரைசதம் அடித்து 20 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 68 ரன்கள், கேப்டன் சூரியகுமார் யாதவ் 23 பந்தில் அரைசதம் அடித்து 26 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 57 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 10 ஓவர்களில் இலக்கை எட்டி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : மீண்டும் 2 மாற்றங்கள்.. நாங்க பயப்பட மாட்டோம்.. அதே சமயத்தில் இப்படி இருக்கிறதும் முக்கியம் – சூரியகுமார் யாதவ் பேச்சு

இந்த போட்டியில் 14 பந்துகளில் சதம் அடித்த அபிஷேக் சர்மா சர்வதேச டி20 போட்டியில் அதிவேக அரைசதம் அடித்த இரண்டாவது வீரராக யுவராஜ் சிங்குக்கு அடுத்த இடம் பிடித்தார். மேலும் இந்திய டி20 கேப்டனாக விராட் கோலியை தாண்டி அதிக வெற்றிகள் பெற்றவராக சூரியக்குமார் முன்னேறினார்.

- Advertisement -