அபிஷேக் ஷர்மாவின் ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடி பின்னர் சொற்ப ரன்களில் ஆட்டமிழப்பது அவருக்கு பின்னடைவாக அமையலாம் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரிந்தர் கன்னா தெரிவித்ததுள்ளார்.
இடது கை தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் ஷர்மா, டி20 சர்வதேச போட்டிகளில் 198.13 என்ற அபாரமான ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 33.37 சராசரியை பெற்றுள்ளார்.
உலகின் நம்பர் 1 டி20 ஆட்டக்காரராகவும் தரவரிசையில் உள்ள அவர், ஆசிய கோப்பை 2025 இல் இந்தியாவின் முன்னணி ரன் அடித்தவராக உள்ளார். குரூப் ஸ்டேஜில், பவர்பிளேயில் அவரது அதிரடியான தொடக்கங்கள், அடுத்து வரும் பேட்ஸ்மேன்களுக்கு அடித்தளமாக அமைந்தன.
பெரும்பாலான கிரிக்கெட் ஆர்வலர்கள் அபிஷேக் ஷர்மாவின் தன்னலமற்ற அணுகுமுறையை பாராட்டியுள்ளனர். ஆனால், அவர் தனது தொடக்கங்களை பெரிய ஸ்கோராக மாற்றவில்லை என்றால், அணியிலிருந்து நீக்கப்படலாம் என்று கன்னா கருத்து தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அவர், “அவர் மிகவும் உற்சாகமான வீரர். அவரது ஸ்ட்ரோக் விளையாட்டு புதிய விளையாட்டு முறையில் மிகவும் நன்றாக உள்ளது. ஆனால், அவர் பெறும் தொடக்கத்தை பெரிய ஸ்கோராக மாற்ற வேண்டும். ஏனெனில், 25-30 ரன்கள் மட்டுமே எடுத்து, பெரிய இன்னிங்ஸ் ஆடாவிட்டால், நீண்ட காலம் அணியில் நீடிக்க முடியாது.”
“நல்ல வீரர்களை வெளியில் வைத்திருக்கும் போது உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. எனவே, நீண்ட இன்னிங்ஸ் ஆட வேண்டும். அவர் வருவாரா இல்லையா என்பது அவரைப் பொறுத்தது,” என்று சுரிந்தர் கன்னா தெரிவித்தார்.
2024 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணியின் மாற்றத்தில் அபிஷேக் ஷர்மா முக்கிய பங்காற்றியுள்ளார்.
ஷுப்மன் கில் தலைமையில் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் அறிமுகமான அவர், இரண்டாவது ஆட்டத்திலேயே சதம் அடித்து வேகமாக உயர்ந்தார்.
தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக், ஆசிய கோப்பை 2025 இன் மூன்று குரூப் ஸ்டேஜ் ஆட்டங்களிலும் 30 ரன்களுக்கு மேல் எடுத்தார். அவர் 225 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 33 சராசரியுடன் 99 ரன்கள் எடுத்து, தொடரில் ஏழாவது முன்னணி ரன் அடித்தவர் ஆவார்.
இதையும் படிங்க:
பாகிஸ்தானுக்கு எதிரான குரூப் ஸ்டேஜ் ஆட்டத்தில், முதல் ஓவரில் ஷாஹீன் அஃப்ரிடியை எதிர்கொண்டு இந்தியாவின் ரன் துரத்தலுக்கு வேகம் அமைத்தார்.
இந்த இரு பரம்பரை எதிரிகளும் ஆசிய கோப்பை 2025 இன் சூப்பர் 4 கட்டத்தில் மீண்டும் மோதவுள்ளனர். இந்தப் போட்டி செப்டம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை, துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது.