இந்தியா இங்கிலாந்து டி20 தொடருக்கு பிறகு வெளியிடப்பட்டிருக்கும் ஐசிசி ரேங்க் பட்டியல்களில் இந்திய பேட்ஸ்மேன்கள் மற்றும் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பான தரநிலையை எட்டி அசத்தியிருக்கிறார்கள்.
இங்கிலாந்து அணி இந்தியா வந்து முதலில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிய நான்குக்கு ஒன்று என தொடரை இழந்தது. இந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்கள் ஐசிசி டி20 ரேங்க் பட்டியலில் அசத்தலான முறையில் முன்னேறி இருக்கிறார்கள். மிகக்குறிப்பாக இளம் வீரர்களின் முன்னேற்றம் மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது.
அபிஷேக் ஷர்மா – திலக் வர்மா அசத்தல்
இங்கிலாந்து டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் சென்னை மைதானத்தில் தனிவீரராக சிறப்பாக விளையாடிய அணியை வெற்றி பெற வைத்த திலக் வர்மா 803 புள்ளிகள் எடுத்து ஒரு இடம் சரிந்து மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார். இதற்கு முன்பாக இரண்டாவது இடத்தில் நீடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதே தொடரில் ஐந்தாவது போட்டியில் வெறும் 54 பந்தில் 135 ரன்கள் விளாசி தள்ளிய அபிஷேக் சர்மா 38 இடங்கள் முன்னேறி 829 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தை பிடித்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். முதல் இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 855 புள்ளிகள் எடுத்து இருக்கிறார். இந்தியாவின் அபிஷேக் சர்மா மற்றும் திலக் வருமா இருவரும் அதிரடியாக விளையாடக் கூடியவர்கள் என்பதால் டிராவிஸ் ஹெட்டின் முதல் இடம் வெகு விரைவில் பறிபோகலாம். இத்துடன் நம்பிக்கை நட்சத்திரம் ஜெய்ஸ்வால் மூன்று இடங்கள் சரிந்து 671 புள்ளியுடன்12 வது இடத்தில் இருக்கிறார்.
வருண் சக்கரவர்த்தி – ரவி பிஸ்னாய் அபாரம்
மிகக்குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றுவதற்கு மிக முக்கிய காரணமாக சுழல் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி விளங்கினார். இவர் ஐந்து போட்டிகளில் மொத்தம் 14 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதன் மூலம் 705 புள்ளிகள் எடுத்து மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார். ஆதில் ரஷீத் இதே புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். முதல் இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் அகேல் ஹூசைன் 707 புள்ளிகள் உடன் முதல் இடத்தில் நீடிக்கிறார்.
இத்துடன் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் வரும் சக்கரவர்த்தி உடன் இணைந்து சுழல் கூட்டணி அமைத்து சிறப்பாக செயல்பட்ட ரவி பிஸ்னாய் 671 புள்ளிகள் உடன் நான்கு இடங்கள் முன்னேறி ஆறாவது இடத்தை பிடித்திருக்கிறார். அக்சர் படேல் இரண்டு இடங்கள் சரிந்து 636 புள்ளிகள் உடன் 13-வது இடத்தில் இருக்கிறார்.
இதையும் படிங்க: ஹர்திக் ரிங்குவை பார்த்து விராட் கோலி இதை உணரணும்.. அது நடந்தா சாம்பியன் நாமதான் – அஸ்வின் அறிவுரை
ஐசிசி டி20 பேட்ஸ்மேன் ரேங்கிங்:
டிராவிஸ் ஹெட் – 855
அபிஷேக் ஷர்மா – 829
திலகம் வர்மா – 803
பில் சால்ட் – 798
சூர்யகுமார் யாதவ் – 738
ஜோஸ் பட்லர் – 729
பாபர் அசாம் – 712
பதும் நிசாங்க – 707
முகமது ரிஸ்வான் – 704
குசல் பெரேரா – 675