அபிஷேக் சர்மாவ இந்த விஷயத்துல.. வாஷிங்டன் சுந்தர் போல நம்ப முடியாது – ஹைதராபாத் கோச் பேட்டி

0
157
Abhishek

நடந்து முடிந்த டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றதும் இடதுகை சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த நிலையில் அவரது இடத்திற்கு வித்தியாசமான முறையில் துவக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா மற்றும் பேட்டிங் வரிசையில் ஏழாவதாக இடம்பெறக்கூடிய வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

இந்திய அணி சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிரடியான பேட்டி முறையை பின்பற்றி கோப்பையை வென்றது. தற்போது இந்திய அணியின் டி20 பேட்டிங் அணுகுமுறை தாக்குதல் பாணியாக மாறி இருக்கிறது. எனவே பேட்டிங் வரிசையில் எட்டாவது இடத்தில் வரக்கூடிய வரும் பேட்டிங் செய்பவராக இருக்க வேண்டிய தேவை இருக்கிறது.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணியில் இரண்டு சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர்கள் இடம்பெட வேண்டிய கட்டாயம் உருவாகி இருக்கிறது. ஒருவர் பவுலிங் ஆல் ரவுண்டராகவும் ஒருவர் பேட்டிங் ஆல் ரவுண்டராகவும் கூட இருக்கலாம்.

தற்போது இந்த இடத்திற்கு அக்சர் படேல் உறுதியாக இருக்கிறார். இன்னும் ஒரு இடத்திற்கு அபிஷேக் ஷர்மா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் போட்டியிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இந்த இருவரில் யார் பந்துவீச்சில் சிறந்தவர்களாக, இந்திய அணியில் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்று ஹைதராபாத் அணியின் பேட்டிங் துணை பயிற்சியாளர் ஹரிஷ் கூறியிருக்கிறார். மேலும் இவர்கள் இருவரும் ஹைதராபாத் அணி ஐபிஎல் தொடரில் விளையாடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஹரிஷ் கூறும்பொழுது “வாஷிங்டன் சுந்தர் ஒரு முழுமையான பந்துவீச்சாளர். அவர் பந்துவீச்சில் லைன் மற்றும் லென்த்தில்மிகவும் சீரானவர். அபிஷேக் சர்மாவிடம் சில வேரியேஷன்கள் இருக்கிறது. அவரால் புதிய பந்தை சீம் செய்ய முடியும். அவரிடம் நல்ல ஆர்ம்-பால் இருக்கிறது. ஆனால் வாஷிங்டன் சுந்தரை போல சீராக நல்ல இடங்களில் பந்தை வீசக்கூடியவர் கிடையாது.

- Advertisement -

இதையும் படிங்க : சச்சின் தோனி மாதிரியே.. விராட் ரோகித்துக்கும் இந்த விஷயம் ரொம்ப கஷ்டம் – கபில் தேவ் பாராட்டு பேச்சு

மேலும் இருவருமே இந்திய அணியில் ஒரே இடத்திற்காக போட்டியிடக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அபிஷேக் சர்மா துவக்க ஆட்டக்காரர் மேலும் மிக அதிரடியான பேட்ஸ்மேன். அபிஷேக் ஷர்மா புதிய பந்திலும் மற்றும் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு எதிராகவும் அணிக்கு சிறந்த சொத்து” என்று கூறியிருக்கிறார்.