கடந்த மாதத்தில் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. இதற்குப் பிறகு ரோகித் சர்மா விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்கள். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இந்திய கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய சேவைகள் செய்திருப்பதாக கபில்தேவ் பாராட்டி இருக்கிறார்.
நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் விளையாடினார்கள். தற்போது இவர்கள் இருவரும் ஓய்வு பெற்றிருக்கின்ற காரணத்தினால் இந்த இடம் காலியாக இருக்கின்றது.
மேலும் இந்திய டி20 அணியில் பேட்டிங் வரிசையை எட்டாவது இடம் வரை நீடிப்பதற்கு இரண்டு சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர்கள் தேவை இருந்ததால் ரவீந்திர ஜடேஜா இடம் பெற்று இருந்தார். தற்போது அவரது இடமும் காலியாக இருப்பதால் அதற்கும் தேடுதல் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் இடத்திற்கு சுப்மன் கில், ஜெய்ஸ்வால், அபிஷேக் ஷர்மா மற்றும் ருதுராஜ் என நான்கு வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்திய கிரிக்கெட்டின் எதிர்கால வீரர்களைக் கண்டறிவதற்கான வேலையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டு இருக்கிறது
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா குறித்து பேசி இருக்கும் தமிழ் தேவ் கூறும் பொழுது “விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் இடத்தை இந்திய கிரிக்கெட்டில் எந்த வடிவத்திலும் எந்த வீரர்களாலும் நிரப்பவே முடியாது. அவர்கள் இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய சேவகர்களாக இருந்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க : நான் எதுலயும் பின் வாங்க மாட்டேன்.. எனக்கும் கோலிக்கும் இடையில எல்லாம் முடிஞ்சுது – நவீன் உல் ஹக் பேட்டி
அவர்களுடைய தரத்திற்கு தகுந்தபடி மிகச் சிறந்த பிரியாவிடை அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. மேலும் சச்சின் மற்றும் தோனியின் இடத்தை இந்திய கிரிக்கெட்டில் யாரும் நிரப்ப முடியாதது போலவே இவர்களது இடத்தையும் நிரப்ப முடியாது. நிச்சயமாக இந்திய டி20 கிரிக்கெட்டில் இவர்கள் இருவரையும் நாம் தவற விடுவோம்” என்று கூறி இருக்கிறார்.