இன்று இந்திய அணி ஆசியக் கோப்பை தொடரின் இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்தத் தொடரின் தொடர் நாயகன் விருதை வென்ற அபிஷேக் ஷர்மா தன்னுடைய ரோல் பற்றி பேசி இருக்கிறார்.
இந்த தொடரின் இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 146 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்த முறை அபிஷேக் ஷர்மா நல்ல தொடக்கத்தை கொடுக்க முடியவில்லை. மிடில் வரிசையில் சிறப்பாக விளையாடிய திலக் வர்மா 53 பந்தில் ஆட்டம் இழக்காமல் 69 ரன் எடுத்து இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.
அபிஷேக் ஷர்மா நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் மொத்தம் 314 ரன்கள் எடுத்திருக்கிறார். ஒரு டி20 தொடரில் இந்திய பேட்ஸ்மேனாக விராட் கோலி 319 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் இருக்கிறார். இன்றைய போட்டியில் அபிஷேக் ஷர்மா 5 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதன் காரணமாக விராட் கோலியின் ரெக்கார்டை உடைக்க முடியவில்லை.
மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 30-க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் ரோகித் சர்மா முகமது ரிஸ்வான் மற்றும் அபிஷேக் சர்மா தலா ஏழு முறை 30 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் இருக்கிறார்கள். இன்றைய போட்டியில் அபிஷேக் ஷர்மா 30க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்திருந்தால் எட்டாவது முறையாக இதை செய்து உலகச் சாதனையை படைத்திருப்பார். துரதிஷ்டவசமாக இந்த இரண்டு சாதனைகளையும் தவறவிட்டார். மேலும் தொடர் நாயகன் விருது பெற்ற அவருக்கு கார் பரிசளிக்கப்பட்டது.
இதுகுறித்து பேசி உள்ள அபிஷேக் சர்மா கூறும் பொழுது “காரை பரிசாக பெறுவது மகிழ்ச்சியான விஷயம். டி20 உலகக் கோப்பை வென்ற அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக வருவது என்பது எளிதான விஷயமாக இருக்காது. நான் என்னுடைய ஆட்டத்தில் மிகவும் கடினமாக உழைத்தேன். அதே சமயத்தில் உங்களுக்கு கேப்டன் மற்றும் பயிற்சியாளரின் ஆதரவு தேவை. எனக்கு இது ஆரம்பத்தில் இருந்தே கிடைத்தது. ஒரு நல்ல தொடக்கத்தை கொடுத்தால் அணி வெற்றி பெற வேண்டும்”
இதையும் படிங்க : கம்பீர் பாய் சொன்ன அந்த விஷயம் தான் உதவியா இருந்தது.. பாகிஸ்தான் சிறப்பா ஒரு வேலை செஞ்சாங்க – திலக் வர்மா பேட்டி
“சில நேரங்களில் நான் விளையாடும் முறைக்கு தோல்வியும் எனக்கு வரும். ஆனாலும் தொடர்ந்து நான் விளையாடும் முறையில் என்னுடைய செயல் திறனில் நான் கவனம் செலுத்த வேண்டும். மேலும் பவர் பிளேவில் சுழல் பந்துவீச்சாளர்கள் வந்தால் நான் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற திட்டம் இருந்தது. மேலும் எந்த பிரிமியம் ஃபாஸ்ட் பவுலராக இருந்தாலும் நான் முதல் பந்தையே அடிப்பேன்” என்று கூறியிருக்கிறார்.