தற்போது ஆசியக் கோப்பை தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி வரும் நாளை இரண்டு பெரிய சாதனைகளை உடைப்பதற்கான வாய்ப்பில்.
நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இறுதிப்போட்டி நாளை துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன.
அபிஷேக் ஷர்மா ருத்ரதாண்டவம்
இந்த ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா இதுவரையில் பவுண்டரிகள் மட்டுமே 50 தாண்டி அடித்திருக்கிறார். மேலும் ஒரு ஆசியக் கோப்பை தொடரில் 300 ரன்கள் தாண்டி எடுத்த முதல் வீரர் என்கின்ற பிரம்மாண்ட சாதனையை படைத்திருக்கிறார்.
இது மட்டும் இல்லாமல் தொடர்ச்சியாக ஏழு முறை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 30+ ரன்கள் எடுத்து ரோஹித் சர்மா மற்றும் முகமது ரிஸ்வான் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை 30+ ரன்கள் எடுத்த சாதனையை சமன் செய்திருக்கிறார். நாளை 30 ரன்கள் தாண்டி எடுத்தால் இந்த உலகச் சாதனையை அபிஷேக்சர்மா முறியடித்து விடுவார்.
விராட் கோலியின் இந்திய சாதனை
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு தொடரில் அதிக ரன் எடுத்த இந்திய பேட்ஸ்மேனாக விராட் கோலி இருந்து வருகிறார். அவர் 319 ரன்கள் ஒரு தொடரில் எடுத்திருக்கிறார். தற்போது அபிஷேக் ஷர்மா 309 ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார். மேற்கொண்டு 11 ரன்கள் எடுத்தால் இந்த சாதனையையும் முறியடித்து விடுவார்.
அதிக முறை 30+ ரன்கள்:
ரோஹித் சர்மா: 7
முகமது ரிஸ்வான்: 7
அபிஷேக் சர்மா: 7
சிக்கந்தர் ராஸா: 6
முகமது ஹபீஸ்: 6
இதையும் படிங்க : பாகிஸ்தான் பைனல்.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. கம்பீர் மாற்றி யோசிப்பாரா.. அந்த வீரர் தேவையா?
ஒரு டி20 தொடரில் இந்திய பேட்ஸ்மேனின் அதிக ரன்கள்:
319 – டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி (2014)
309 – ஆசிய கோப்பையில் அபிஷேக் (2025)
296 – டி20 உலகக்கோப்பையில் விராட் கோலி (2022)
276 – ஆசிய கோப்பையில் விராட் கோலி (2022)
273 – டி20 உலகக் கோப்பையில் விராட் கோலி (2016)
257 – டி20 உலகக் கோப்பையில் ரோஹித் (2024)






