நாளை நடப்பு 2025 ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டு விளையாட இருக்கிறது. இந்தப் போட்டிக்கான இந்திய பிளேயிங் லெவனில் கம்பீர் ஒரு முக்கிய மாற்றத்தை செய்வாரா? என்கின்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
தற்போதைய ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தகுதி பெற்று இருக்கின்றன. முதல் மற்றும் இரண்டாவது சுற்றில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி வெகு சுலபமாக வீழ்த்தி இருக்கிறது. இதற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் அணியும் தயாராகி வருவதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கிறது.
நேற்றைய பாடம்
நேற்று இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 202 ரன்கள் எடுத்தும் கூட போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. அர்ஸ்தீப் சிங் அணியில் இருந்த காரணத்தினால் அவர் கடைசி இரண்டு ஓவர்கள் மற்றும் சூப்பர் ஓவரை மிகச் சிறப்பாக வீசி இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.
தற்போது இந்திய அணியின் வழக்கமான பிளேயிங் லெவனில் இடம்பெறும் பும்ரா பவர் பிளேவில் மூன்று ஓவர்கள் வீசிவிடுகிறார். நாளை இறுதிப்போட்டியில் சிக்கலான சூழ்நிலை கடைசி நேரத்தில் ஏற்படும்பொழுது அங்கு பும்ராவுக்கு ஒரு ஓவர் மட்டுமே இருக்கும். எனவே அவருடன் இணைந்து பந்து வீச கூடுதலாக அர்ஸ்தீப் சிங் தேவை என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
இந்த வீரர் தேவையா?
தற்போது இந்திய அணி விளையாடும் விதத்திற்கு 7 பேட்ஸ்மேன்கள் போதுமானவர்களாக இருக்கிறார்கள். இதன் காரணமாக எட்டாவது பேட்ஸ்மேன் இடத்தில் இடம்பெறும் சிவம் துபே அணிக்கு தேவையா என்கின்ற கேள்வி எழுந்திருக்கிறது. எனவே கூடுதல் பேட்ஸ்மேன் அவசியம் இல்லை என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.
எனவே சிவம் துபே இடத்தில் பவர் பிளே மற்றும் இறுதிக் கட்ட ஓவர்களில் பந்து வீசக்கூடிய அர்ஸ்தீப் சிங் இடம்பெற வேண்டும் என்பது கோரிக்கையாக இருந்து வருகிறது. கம்பீர் இந்த மாற்றத்தை செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : அவர அவுட் ஆக்குனா இந்தியாவை ஜெயிக்கலாம்னு பாக் அணி நினைக்க கூடாது – இர்பான் பதான் எச்சரிக்கை
இந்திய பிளேயிங் XI : கில், அபிஷேக் ஷர்மா, சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி, அர்ஸ்தீப் சிங், குல்தீப் யாதவ் மற்றும் பும்ரா.






