2 நிமிஷ மேகி மேன்.. ஹிட்மேன் ரோகித்தானது இப்படித்தான்.. வயிற்றுல ஒரு அம்புக்குறி இருந்தது – அபிஷேக் நாயர் பேட்டி

0
87
Rohit

தற்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணை பயிற்சியாளராக இருந்து வரும் அபிஷேக் நாயர் பல இந்திய கிரிக்கெட் வீரர்களின் முன்னேற்றத்திற்கு மிகவும் முக்கியமானவராக இருந்திருக்கிறார். இந்த நிலையில் ரோஹித் சர்மா 2011 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை அணியில் இருந்து கழட்டி விடப்பட்ட பிறகு, அவர் எப்படி முன்னேறி வந்து பெரிய வீரராக மாறினார்? என்று கூறி இருக்கிறார்.

2011 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்க்கும் முன்பாகவே, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சச்சின் உடன் இணைந்து ரோஹித் சர்மா சிறந்த இன்னிங்ஸ் ஒன்றை விளையாடியிருந்தார். அவர் அப்பொழுதே அணிக்கு தேவையான இளம் வீரராக மாறி இருந்தார்.

- Advertisement -

இப்படியான நிலையில் தான் அவரை 2011 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர இந்திய அணியில் தேர்வுசெய்யாமல் விட்டார்கள். இந்த விஷயம் ரோகித் சர்மாவை மிகவும் பாதிப்படைய வைத்திருந்தது. இந்த நிலையில் அங்கிருந்து எப்படி முன்னேறி வந்தார்? என்று சக மும்பை இந்தியன்ஸ் வீரராக அப்போது இருந்த அபிஷேக் நாயர் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அபிஷேக் நாயர் பேசும்பொழுது ” 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு அவரை தேர்வு தேர்வு செய்யாத பொழுது, நான் அவரிடம் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கூறினேன். அப்பொழுது அவரது உடல் எடை கொஞ்சம் அதிகரித்து இருந்தது. ரோகித் சர்மா உடன் இணைந்து ஒரு விளம்பரத்தில் அவர் நடித்திருந்தார். அதில் ரோஹித் சர்மாவின் வயிற்றுப் பகுதியில் அம்புக்குறி இட்டு காட்டப்பட்டிருந்தது. நான் அதை காட்டி இதை மாற்ற வேண்டும் எனக் கூறினேன்.

- Advertisement -

சில நாட்களுக்குப் பின்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அணி 2011 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் அவரை அணியில் தேர்வு செய்யவில்லை. ஆனால் அங்கிருந்து அவர் உழைத்து ஹிட்மேன் ஆக மாறினார். ஒரு வெற்றிகரமான வீரராக மாறிய, பல கருத்துக்களை பரிமாறிக் கொண்டு ஒரு வீரருடனான எனது முதல் பயணம் அது.

இதையும் படிங்க : வெ.இ மோசமா இருந்தப்ப கேப்டனா வந்தேன்.. இன்னைக்கு வந்த இந்த விஷயம் செம ஹேப்பி – ரோமன் பவல் பேட்டி

ரோகித் சர்மாவை பற்றி மக்கள் நிறைய விஷயங்களை பேசினார்கள். அவருடைய திறமையை இரண்டு நிமிட மேகி மேன் என்று கூறினார்கள். ஆனால் அங்கிருந்து உழைத்து ஹிட்மேன் ஆகி காட்டி இருக்கிறார். என்னிடம் ஐபிஎல் தொடர் முடிந்ததும் நான் என்ன வேண்டுமானாலும் நீங்கள் சொல்வதைக் கேட்கிறேன் என்று சொன்னார். மேலும் பழைய ரோகித் சர்மா இல்லை என மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -