வெ.இ மோசமா இருந்தப்ப கேப்டனா வந்தேன்.. இன்னைக்கு வந்த இந்த விஷயம் செம ஹேப்பி – ரோமன் பவல் பேட்டி

0
63
Powell

நடப்பு டி20 உலக கோப்பை தொடரை நடத்தி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி மிகச் சிறப்பாக ரோமன் பவர் தலைமையில் விளையாடி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. மேலும் நாளை காலை முதல் சுற்றின் கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி குறித்து அந்த அணியின் கேப்டன் ரோமன் பவல் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

ஒரு காலத்தில் உலகக் கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்திய அணியாக வெஸ்ட் இண்டீஸ் இருந்து வந்தது. 90 களுக்கு மேல் அந்த அணிக்கு சரிவு ஆரம்பித்து, படிப்படியாக தேய்ந்து, கடைசியாக 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை மற்றும் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தகுதி பெற முடியாமல் அதிர்ச்சி அளித்து வெளியேறியது.

- Advertisement -

இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இரண்டு டி20 உலகக்கோப்பைகளை வென்ற கேப்டன் டேரன் சமி தலைமையில் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு புத்துயிர் கிடைத்திருக்கிறது. குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் அவர்கள் தர வரிசையில் மேலே ஏறி வந்திருக்கிறார்கள். அவர்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் தான் அவர்களுக்கான ஸ்பான்சர்கள் கிடைக்கும்.

இந்த நிலையில் வெஸ்ட் இண்டிஸ் அணியின் மீள் எழுச்சி குறித்து பேசிய கேப்டன் ரோமன் பவல் “கிரிக்கெட்டில் எப்பொழுதுமே அழுத்தம் இருக்கும். குறிப்பாக உங்களுடைய நாட்டில் நடக்கும் ஒரு உலகக் கோப்பை தொடரில் உங்களுக்கு எப்பொழுதும் தனி அழுத்தம் இருக்கும். இந்த அழுத்தங்களை தனிநபர்களான நாங்கள்தான் சமாளிக்கிறோம். மேலும் 12 அல்லது 14 மாதங்களுக்கு முன்பாக நான் கேப்டன் ஆக பொறுப்பேற்ற பொழுது நாங்கள் தரவரிசையில் ஒன்பதாவது இடத்தில் இருந்தோம்.

- Advertisement -

தற்பொழுது எங்களை இன்று ஐசிசி தரவரிசையில் மூன்றாவது இடத்தில் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுகிறோம் மேலும் சரியாக செயல்படுகிறோம் என்பதையே இது காட்டுகிறது. இந்த நிலையை எட்டியது எனக்கு நம்பிக்கை அளிக்கிறது. நாங்கள் இன்னும் தொடர்ந்து முன்னேற முடியும்.

இதையும் படிங்க : பாபர் அசாமுக்கு அந்த தகுதியே கிடையாது.. கேப்டனா இருக்கிறதால தப்பிக்கிறாரு – சேவாக் விமர்சனம்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டி மிக முக்கியமான போட்டி. அவர்கள் சில காலமாக சிறப்பாக விளையாடி வருகிறார்கள். அவர்கள் அணியில் நிறைய மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள். சூப்பர் 8 சுற்றுக்கு முன்பாக அவர்களுடன் நாங்கள் விளையாட இருக்கும் போட்டி மிகவும் முக்கியமான போட்டியாக எங்களுக்கு அமைகிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -