கேஎல்.ராகுலின் தற்போதைய சிறந்த பேட்டிங் ஃபார்முக்கு பின்னால் அப்போதைய கேப்டன் ரோஹித் சர்மா எந்த அளவிற்கு இருந்தார் என்பது குறித்து முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் கூறியிருக்கிறார்.
இந்த ஆண்டு சாம்பியன் டிராபி தொடரில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு கேஎல்.ராகுல் ஒரு முக்கிய காரணமாக இருந்தார். அவருடைய பேட்டிங் அணுகுமுறை அதிரடியாக மாறி இருந்தது. கடினமான கடைசி நேரத்தில் அவரே அதிரடியை கையில் எடுத்தார். இதற்குப் பின்னணியில் ரோகித் சர்மா இருக்கிறார் என தற்போது அபிஷேக் நாயர் கூறியிருக்கிறார்.
கேஎல்.ராகுல் எப்பொழுதும் பார் மில் இருக்கக்கூடிய பேட்ஸ்மேன். ஆனால் அவர் திடீரென மோசமான முறையில் ஆட்டம் இழப்பார். அவர் செட் ஆகிவிட்டார் இனி பெரிய ரன்கள் வரும் என்று நம்மால் உறுதியாக நம்ப முடியாது. மேலும் சிறப்பாக தாக்கி விளையாட முடிந்த அவர் திடீரென பந்தை அடிப்பதற்கு கஷ்டப்படுவார். இது எல்லாமே அவருக்கு மன ரீதியான பிரச்சனையாக இருந்து வந்தது.
இந்த நிலையில் அடுத்தடுத்து பெரிய தொடர்கள் இருந்த சூழ்நிலையில் கேஎல்ராகுல் பேட்டிங் இந்திய அணிக்கு மிக முக்கியமாக இருக்கும் என உணர்ந்து அப்போதைய பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயருக்கு ரோஹித் சர்மா முக்கியமான ஒரு பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார். இன்று அதற்கான பலனை இந்திய கிரிக்கெட் அறுவடை செய்து கொண்டிருக்கிறது.
இதுகுறித்து அபிஷேக் நாயர் பேசும் பொழுது “நான் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக் கொண்டதும், அப்போதைய கேப்டன் ரோஹித் சர்மாவுடன் ஒரு பெரிய உரையாடலை நடத்தியது எனக்கு ஞாபகம் இருக்கிறது. நான் செய்யப் போகும் விஷயங்களில் அவர் மிகவும் ஆர்வமாக இருந்தது எதுவென்றால், கேஎல்.ராகுலுடன் இணைந்து நான் வேலை செய்வதில்தான்”
இதையும் படிங்க : 458 ரன்.. ஒரே இன்னிங்ஸில் பங்களாதேஷ் அணியை முடித்த இலங்கை.. இந்தியாவை தாண்டி புள்ளி பட்டியலில் அசத்தல்
“ரோகித் சர்மா என்னிடம் கேஎல்.ராகுல் இடம் இருந்து சிறந்ததை கொண்டு வர வேண்டும், அவர் அதிரடியாக விளையாடுவதை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறினார். ஏனென்றால் அப்போது அடுத்தடுத்து சாம்பியன்ஸ் டிராபி, ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர்கள் இருந்தன. இந்த தொடர்களில் கேஎல்.ராகுல் மிக முக்கிய வீரராக இருப்பார் என அப்போது ரோகித் சர்மா நம்பினார். அதனால்தான் எனக்கு இந்த பொறுப்பை கொடுத்தார்” என்று கூறியிருக்கிறார்.