நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மைக் ஹெசன் தங்கள் அணியின் ஸ்பின்னரை உலகின் தலைசிறந்தவர் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் வருகின்ற ஞாயிறு செப்டம்பர் 14ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் எதிர்த்து விளையாட இருக்கின்றன. இந்த தொடரில் மிக முக்கியமான போட்டியாக இது அமைந்திருக்கிறது.
பாகிஸ்தானின் பலம்
பாகிஸ்தான் தற்போது ஷாகின் அப்ரிடி, பாகின் அஷ்ரப் என இரண்டே வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து களம் இறங்குகிறது. இவர்கள் இருவருமே பேட்டிங் செய்யக் கூடியவர்கள். அடுத்து சையும் அயூப் மற்றும் முகமது நவாஸ் என இரண்டு சுழல் பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களை களம் இறக்குகிறார்கள்.
மேலும் முழுமையான பந்துவீச்சாளர்களாக சுழல் பந்துவீச்சாளர்கள் சுபியான் முகீம் மற்றும் அப்ரார் அகமது இருவரும் விளையாடுகிறார்கள். இவர்களுடன் கேப்டன் சல்மான் அலி ஆகா ஐந்தாவது ஸ்பின்னர் ஆக இருப்பார். இதன் காரணமாக ஒரே பிளேயிங் லெவனில் 5 ஸ்பின்னர்கள் வருகிறார்கள். இத்துடன் பேட்டிங் வரிசை ஒன்பது வரையில் மாறி இருக்கிறது. இதுவெல்லாம் தற்போது பாகிஸ்தான் அணியின் பலமாக உருவெடுத்திருக்கிறது.
இவர் உலகின் தலைசிறந்தவர்
இது குறித்து மைக் ஹெசன் பேசும் பொழுது “எங்கள் அணிக்கு ஐந்து சுழல் பந்துவீச்சாளர்கள் கிடைத்திருக்கிறார்கள் என்பது தான் எங்கள் அணியின் உடைய அழகு என்று நான் நினைக்கிறேன். மேலும் தற்போது உலகில் தலைசிறந்த சுழல் பந்து வீச்சாளரான முகமது நவாஸ் எங்கள் அணிக்கு கிடைத்திருக்கிறார். அவர் அணிக்கு திரும்பிய கடந்த ஆறு மாதத்தில் உலகின் தலைசிறந்தவராக மாறியிருக்கிறார்”
இதையும் படிங்க: விராட் கோலியிடம் இந்த விஷயம் தான் என்னை ஊக்கப்படுத்தும்.. அவரைப் பார்க்கவே வியப்பா இருக்கு – சுப்மான் கில் வியப்பு
“மேலும் எங்களிடம் முக்கிய ஸ்பின்னர்களான சுபியான் மற்றும் அப்ரார் அகமது இருக்கிறார்கள். எங்கள் கேப்டன் சல்மான் அலி ஆகா டெஸ்ட் கிரிக்கெட்டில் சுழல் பந்து வீசக்கூடியவர். தற்போது எங்களிடம் ஐந்து ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். கண்டிஷன் சாதகமாக இருப்பதை பொறுத்து நாங்கள் எங்கள் அணியை அமைத்துக் கொள்வோம்” என்று கூறி இருக்கிறார்.






