இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா திறமையை நம்ப கூடியவர் இல்லை எனவும், அவர் பயிற்சி முறைகள் வித்தியாசமானது எனவும் இந்திய முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் கூறியிருக்கிறார்.
தற்போது இந்திய அணியின் பிளேயிங் லெவனை விருப்பப்பட்ட படி அமைத்துக் கொள்வதற்கு வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா முக்கிய துருப்புச் சீட்டாக இருக்கிறார். அவர் இல்லை என்றால் நினைத்தபடி இந்திய அணியை மாற்றி அமைத்துக் கொள்ள முடியாது.
இந்திய அணிக்கு முக்கியமான போட்டிகளில் விராட் கோலிக்கு அடுத்து மிகச் சிறப்பாக செயல்படும் வீரராக ஹர்திக் பாண்டியா தொடர்ந்து இருந்து வந்திருக்கிறார். தற்போது பும்ராவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது வேகப்பந்துவீச்சாளராகவும் ஆசியக் கோப்பையில் செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் கம்பீர் கொண்டு வந்த முன்னாள் இந்திய பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் ஹர்திக் பாண்டியா என்ன மாதிரியான பயிற்சி முறைகளை மேற்கொள்கிறார்? அவர் இயல்பிலேயே எப்படிப்பட்டவர் என்பது குறித்து சில ஆச்சரியமான தகவல்களை கூறியிருக்கிறார்.
இது குறித்து அபிஷேக் நாயர் பேசும் பொழுது “ஹர்திக் பாண்டியா உண்மையில் சற்று வித்தியாசமானவர். அவர் திறமையில் அதிகம் நம்பிக்கை இல்லாதவர். எனவே அவர் நிறைய பயிற்சி செய்கிறார். குறிப்பாக பேட்டிங் பயிற்சியை விட பந்துவீச்சு பயிற்சியைத்தான் அதிகம் செய்கிறார். இருப்பினும் அவர் தன்னுடைய உடல் நலம் மற்றும் உடற்பயிற்சி ஆகியவற்றுக்கு தனியாக கவனம் செலுத்துகிறார். யோகா செய்தல் மற்றும் ஊட்டச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்ளுதல், இவற்றோடு ஒரு நாளைக்கு இரண்டரை மணி நேரம் பயிற்சி செய்வார்”
இதையும் படிங்க : எங்களுக்கு வெறுப்பு கிடையாது.. சாம்சனுக்கு இந்த ரோல்தான்.. 2 பேர் இத முடிவு செஞ்சாங்க – இந்திய பேட்டிங் கோச் பேட்டி
“அவர் அணியில் எப்பொழுதும் விடாமுயற்சியுடன் இருக்கக்கூடியவர். அவர் மனதளவில் மிகவும் சரியாக இருக்கக் கூடியவர் ஆனால் உடல் அளவில் சரியாக இருப்பதற்கு எப்பொழுதும் முயற்சி செய்யக் கூடியவர். அவர் போட்டிக்கு தன்னுடைய தயாரிப்பை எப்பொழுதும் நம்புகிறார். ஆனால் மனதளவில் மிக வலிமையானவர்” என்று கூறி இருக்கிறார்.