“தல தோனியின் இந்தவொரு ஐடியா.. சிவம் துபே கிரிக்கெட் வாழ்க்கையையே மாத்திடுச்சு” – அபினவ் முகுந்த் விளக்கம்

0
6252

உலக கிரிக்கெட் அட்டவணையில் மிக முக்கியமான இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் டி20 லீக் தொடர் மார்ச் மாதம் இறுதியில் ஆரம்பித்து மே மாத இறுதியில் முடிவடைகிறது.

இதற்கு அடுத்து ஜூன் மாதம் மத்தியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக் கோப்பைத் தொடர் நடைபெற இருக்கிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் இந்த முறை மொத்தம் 20 அணிகள் பங்கு பெறுகின்றன.

- Advertisement -

ஒவ்வொரு சர்வதேச டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற அணிகளும் அதற்கான முன் தயாரிப்புகளில் மும்முரமாக வேலை செய்து வருகின்றன. இந்த வகையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகமும் தங்கள் தயாரிப்புகளை வேகமாக நிறைவேற்றி வருகிறது.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயமடைந்து இருக்கின்ற காரணத்தினால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் மிதவேக பந்துவீச்சு ஆள் ரவுண்டர் சிவம் துபேவுக்கு வாய்ப்பு கொடுத்து தயார்படுத்தி வருகிறது.

அவர் ஆரம்பக் கட்டத்தில் இருந்தது போல் இல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாங்கப்பட்டு, மகேந்திர சிங் தோனியிடம் சில முக்கியமான அறிவுரையை பெற்று, மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். பேட்டிங் மட்டும் என்று இல்லாமல் அவருடைய பந்துவீச்சும் தற்பொழுது சிறப்பாக மாறி இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் தமிழக வீரர் அபினவ் முகுந்த் மகேந்திர சிங் தோனி சிவம் துபேவுக்கு என்ன மாதிரி ஒரு முக்கிய ஐடியாவை கொடுத்து அவரது கிரிக்கெட் வாழ்க்கையை மாற்றி இருக்கிறார் என்று மிக விளக்கமாகப் பேசியிருக்கிறார்.

இதுகுறித்து அபினவ் முகுந்த் கூறும் பொழுது ” 2023 ஆம் ஆண்டுக்கு முன்பாக சிவம் துபேவுக்கு ஷார்ட் பந்தில் ஒரு பெரிய பலவீனம் இருந்தது. மிகச் சரியாக இந்த இடத்தில்தான் மகேந்திர சிங் தோனியின் ஒரு அறிவுரை அவரது மொத்த கிரிக்கெட் வாழ்க்கையையும் மாற்றி இருக்கிறது.

2023 ஆம் ஆண்டுக்கு முன்பாக இப்படியான பந்துகளில் அவர் நிறைய முறை ஆட்டம் இழந்து இருக்கிறார். ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாங்கப்பட்டு விளையாடிய பிறகு, அவர் இப்படியான பந்துகளுக்கு ஆட்டம் இழப்பது ஒரே ஒரு முறை மட்டும்தான் நடந்திருக்கிறது.

இதில் மகேந்திர சிங் தோனியின் அறிவுரை என்னவாக இருக்கும் என்றால், சிவம் துபே கடந்த போட்டியில் விளையாடிய வீடியோவை பார்க்கும் பொழுது, வீசப்பட்ட ஷார்ட் பந்துகளை அவர் பெரும்பாலும் பவுண்டரி, சிக்ஸர் அடிக்க நினைக்கவில்லை. சிங்கிள் எடுக்க மட்டுமே நினைக்கிறார். மிகவும் ஷாட் ஆக வீசப்படுகிற பந்தை மட்டுமே பெரிய ஷாட் விளையாட நினைக்கிறார்.

இதன் காரணமாக அவர் விக்கெட்டை தராமல் நீண்ட நேரம் விளையாடுவது உறுதியாகிறது. இதன் மூலம் வேறு வகையான பந்துகளில் அவர் ரன்கள் எடுக்கிறார். இதனால் அவர் ஒரு ஆல் ரவுண்டு பேட்ஸ்மேனாக தெரிகிறார்” என்று கூறியிருக்கிறார்.