இந்த முறை தன்னுடைய முழு கவனமும் ஐபிஎல் கோப்பையை வெல்வதும் இதுதான் இருக்கிறது என பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கூறியிருக்கிறார்.
கடந்த முறை பஞ்சாப் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் முன்னேறி கோப்பையை ஆர்சிபி அணியிடம் இழந்தது. கேப்டன் மற்றும் பேட்ஸ்மேனாக ஸ்ரேயாஸ் ஐயர் மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு இருந்தார்.
அதிரடியான பேட்டிங்
ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஷார்ட் பந்துகளில் கொஞ்சம் பிரச்சனை இருந்து வந்தது. ஆனால் தற்போது அது முழுவதுமாக சரியாகி உள்ளது. இதன் காரணமாக அவரது ஆட்டம் அதிரடியாக மாறி, ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பெரிய உந்து சக்தியாக அமைந்தது. இதனால் அந்த அணி இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது.
அதே சமயத்தில் ஆஸ்திரேலியா ஒரு நாள் தொடரில் விலா எலும்பு உடைந்து பெரிய காயம் ஏற்பட்டது. தற்போது இதிலிருந்து மீண்டு வந்துள்ள ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய ஒருநாள் அணியிலும் இடம் பிடித்தார். தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடவும் தயாராக இருக்கிறார்.
நான் மீண்டு வந்திருக்கிறேன்
இதுகுறித்து ஸ்ரேயாஸ் ஐயர் பேசும் பொழுது “காயத்திற்கு பிறகு மீண்டு வருவது எப்போதும் சவாலானது. அந்த காயத்திற்கு பிறகு நான் 7 கிலோ உடல் எடையை இழந்திருந்தேன். அது ஒரு கடுமையான காயம். நல்ல வேளையாக நான் இரண்டு மாதங்களில் திரும்பி வந்து விட்டேன். ஆனால் இழந்த 7 கிலோ உடல் எடையை மீண்டும் கொண்டு வருவதற்கு பெரிய உழைப்பு தேவைப்பட்டது”
இதையும் படிங்க : மொபைல் நம்பரை மாற்றி தலைமுறைவான ஆர்சிபி சாம்பியன் இந்திய வீரர்.. பயிற்சிக்கும் வரவில்லை – என்ன நடக்கிறது?
” நான் சவால்களை பெரிதாக விரும்பக்கூடியவன். இந்த சவால்களை நான் கடந்து வர வேண்டி இருந்தது. இதிலிருந்து மீண்டும் இந்திய அணிக்காகவும் தற்போது ஐபிஎல் தொடரில் விளையாட இருப்பதும் மகிழ்ச்சி. நான் என் குறித்து பெருமைப்படுகிறேன். எதிர்பார்ப்புகள் அதிகம் இருப்பது எனக்கு பிடித்திருக்கிறது. காரணம் எனக்கு சவால்கள் பிடிக்கும். இந்த முறை என்னுடைய முழு கவனமும் கோப்பையை வெல்வதில்தான் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.






