” தோனியைப் பற்றி ஒரு வார்த்தை ? ” ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் கமெண்டரியில் அபினவ் முகுந்த் கேட்ட கேள்விக்கு ஹர்பஜன் சிங் தமிழில் பதில்

0
155
MS Dhoni and Harbhajan Singh

ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனில் விலைபோகாத, ஓய்வுபெற்ற இந்திய முன்னாள் வீரர்கள் தற்போது ஐ.பி.எல்-காக, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சானலில் வர்ணனையாளர்களாக, ருசிகரமான தகவல்களைக் கூறி, வர்ணனையை சுவாரசியப்படுத்தி வருகிறார்கள்.

இந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர்களாக மட்டுமில்லாமல், சாதனை வீரர்களாக பிரபலமாக இருந்த சுரேஷ் ரெய்னா, இர்பான் பதான், ஹர்பஜன் சிங் முக்கியமானவர்கள். இதில் சுரேஷ் ரெய்னா ஏற்கனவே ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் கமெண்ட்ரியில் வந்து சுவாரசியமாகப் பேசி சென்றிருந்தார்.

- Advertisement -

இன்று சென்னை ஆட்டம் நடந்து வருவதால், தமிழகத்தின் தற்கால திருவள்ளுவர் ஹர்பஜன் சிங்கை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் கமெண்ட்ரிக்கு அழைத்து வந்திருந்தார்கள். அவருடன் அவரின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் ஹாட்ரிக்கில் பங்குபெற்ற சடகோபன் ரமேசும், அபினவ் முகுந்தும் இருந்தனர்!

அப்பொழுது அபினவ் முகுந்த் ஹர்பஜன் சிங்கிடம் மகேந்திர சிங் தோனி பற்றி ஒரே வார்த்தையில் சொல்ல சொல்லிக் கேட்க, அதற்கு ஹர்பஜன் “ஐ.பி.எல்-ல் எத்தனை கேப்டன் வந்தாலும், ஒரே ஒரு தலைவன் எம்.எஸ் தோனிதான்” என்று கலகலப்பாகக் கூறினார்.

மேலும், அடுத்த முறை தமிழ் கமெண்ட்ரிக்கு நிரந்தரமாக வரவேண்டுமென்று விடைபெறும் நேரத்தில் ஹர்பஜன் சிங்கிடம் அபினவ் முகுந்த் கேட்க, அதற்கு ஹர்பஜன் சிங் “தமிழைக் நல்லா கற்றுக்கொள்ள முயற்சி செய்யறன். கற்றுக்கொண்டு கண்டிப்பா வருவேன்” என்றும் கூறினார்!

- Advertisement -