“அடுத்த சில ஆட்டங்களில் அவர் ஏதாவது சிறப்பாக செய்யப் போகிறார்” – குஜராத் அணியின் வீரர் பற்றி அபினவ் மனோகர்!

0
278

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . 35 போட்டிகள் முடிவடைந்த நிலையில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து வெற்றிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது . ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியினர் அதை ஐந்து வெற்றிகள் உடன் ரன் ரேட் அடிப்படையில் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கின்றனர் .

மும்பை மற்றும் குஜராத் அணிகளுக்கிடையேயான நேற்றைய போட்டியில் குஜராத் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது . இந்தப் போட்டியில் சுப்மண் கில் டேவிட் மில்லர் மற்றும் அபினவ் மனோகர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 207 ரன்களை குவித்தது, இதனைத் தொடர்ந்து ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 152 ரன்கள் மட்டுமே எடுத்தது .

- Advertisement -

இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய கர்நாடகாவைச் சார்ந்த அதிரடி ஆட்டக்காரர் அபினவ் மனோகர் 21 பந்துகளில் 42 ரன்களை எடுத்திருந்தார். அதில் மூன்று சிக்ஸர்களும் மூன்று பவுண்டரிகளும் அடங்கும் . கடந்த ஆண்டும் சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இவருக்கு இந்த ஆண்டும் தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன . தனக்கு வழங்கப்பட்டு வரும் வாய்ப்புகளை மிகச் சிறப்பாக பயன்படுத்திய இவர் நேற்றைய ஆட்டத்தில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் குஜராத் அணி 200 ரன்களுக்கு மேல் குவிக்க உதவினார் இவர் டேவிட் மில்லருடன் அமைத்த பார்ட்னர்ஷிப் ஆட்டத்திற்கு திருப்புமுனையாக அமைந்தது

குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் ஃபார்ம் சமீப காலமாகவே சரிவடைந்துள்ளது . இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் ஆடி இருக்கும் அவர் இதுவரை ஒரே ஒரு அரை சதை மட்டுமே எடுத்திருக்கிறார் . இந்நிலையில் ஆட்டநாயகன் விருது பெற்ற அபிநவ் மனோகர் தங்களின் கேப்டன் இடமிருந்து மிகச் சிறப்பான ஒரு ஆட்டத்தை வெகு விரைவாக எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்திருக்கிறார் .

இதுகுறித்து பேசி இருக்கும் அவர் ” ஹர்திக் பாண்டியா ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர் . அவரிடமிருந்து ஸ்பெஷலான ஒரு ஆட்டம் நமக்காக வெகு விரைவில் காத்திருக்கிறது . வெகு விரைவிலேயே தன்னுடைய ஃபார்முக்கு அவர் திரும்புவார்” என்று கூறினார் .

- Advertisement -

மேலும் தனது ஆட்டம் பற்றி தொடர்ந்து பேசிய அவர் ” கடந்த ஆண்டு என்னுடைய பீல்டிங் கொஞ்சம் சுமாராக இருந்தது இந்த முறை அதனை நான் மேம்படுத்தி இருக்கிறேன் . என்னுடைய தாக்குதல் வாணி ஆட்டமும் இந்த முறை நன்றாக முன்னேறியுள்ளது . கடினமான பயிற்சிகளின் மூலம் இது சாத்தியமானது” என்று தெரிவித்தார்,