18வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழா வருகிற மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான மெகா ஏலம் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக துபாயில் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் ஆர்சிபி அணியின் அடுத்த கேப்டன் குறித்து அதன் முன்னாள் வீரர் டிவிலியர்ஸ் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக கருதப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அதிக ரசிகர் பட்டாளங்களைக் கொண்ட அணிகளில் ஒன்றாக திகழ்கிறது. இருப்பினும் அந்த அணியால் இன்னும் ஒரு ஐபிஎல் கோப்பையை கூட வெல்ல முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தற்போது அதனை மாற்றும் விதமாக சமீபத்தில் நடைபெற்ற மெகா ஏலத்தில் சிறப்பான வீரர்களை எடுத்து ஆர்சிபி அணி இந்த முறை வலுவாக கட்டமைத்துள்ளது.
மேலும் கடந்த முறை பெங்களூர் அணியின் கேப்டன் ஆகத் திகழ்ந்த பாப் டு பிளசிஸ் இந்த முறை தக்க வைக்காத நிலையில் ஆர்சிபி அணியின் அடுத்த கேப்டன் யார்? என்ற கேள்விகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சூழ்நிலையில் ஆர்சிபி அணியின் முன்னாள் வீரரும் நட்சத்திர தென்னாப்பிரிக்க முன்னாள் வீரருமான ஏபி டிவில்லியர்ஸ் ஆர்சிபி அணி அடுத்த கேப்டனாக நியமிக்க விராட் கோலி மட்டுமே இருக்கிறார் என சில முக்கிய கருத்துகளை கூறி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ஆர்சிபி அணியின் அடுத்த கேப்டன் பதவிக்கு விராட் கோலி மட்டுமே ஒரே வழி என்று நினைக்கிறேன். அவர் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டார். முன்பு இருந்ததை விட அதிக உத்வேகத்துடன் தற்போது காணப்படுகிறார். அவர் பார்ம் பெற்று ரன்கள் எடுக்கும் வரை அவர் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ்கள் விளையாடுவதை பார்த்து நாங்கள் பழகி விட்டோம். எனவே பெங்களூர் அணிக்கு அடுத்த கேப்டனாக விராட் கோலி மட்டுமே இருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:24 பந்து 0 பவுண்டரி 1 விக்கெட்.. பவுலிங்கில் கலக்கிய ராயல்ஸ் வீரர்.. டிகாக் போராட்டம் வீண்.. 5 விக்கெட்டில் டர்பன் தோல்வி
இதுகுறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெங்களூர் அணியின் கேப்டன் குறித்து பேசிய பயிற்சியாளர் கேப்டன் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனவும், உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அடுத்த கேப்டன் இருப்பார் எனவும் மறைமுகமாக தெரிவித்து இருக்கிறார். இதன் மூலமாக பெங்களூர் அணியின் கேப்டனாக விராட் கோலி வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. எனவே அதன் அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் சில நாட்களில் தெரியவரும் என்று எதிர்பார்க்கலாம்.