இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடருக்குப் பிறகு பாகிஸ்தானில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.
இந்த சூழ்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரான ஏபி டிவில்லியர்ஸ் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடப் போகும் வீரர் குறித்து சில முக்கிய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில், இரண்டு நாடுகளுக்கும் பொதுவாக துபாயில் இந்திய அணி விளையாடும் போட்டிகளை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்தது. பாகிஸ்தான் ஆடுகளங்கள் எப்போதுமே வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் நிலையில் துபாயில் உள்ள ஆடுகளங்கள் இந்திய ஆடுகளங்களைப் போன்று சற்று சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கக்கூடியவை.
எனவே இந்திய அணி இதற்கு முக்கியத்துவம் கொடுத்து முன்னணி சுழற் பந்துவீச்சாளர்களை சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு எடுத்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில் சமீபத்தில் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை தவறவிட்ட குல்தீப் யாதவ் காயம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு தற்போது ஓய்வு எடுத்து வரும் நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளார். இந்த சூழ்நிலையில் அடுத்ததாக நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இந்திய அணிக்காக சிறப்பாக செயல்படுவார் என்று தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் டிவில்லியர்ஸ் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “குல்தீப் யாதவ் சாம்பியன்ஸ் டிராபி தொடர் விளையாட உள்ள இந்திய அணியில் இருக்கிறார். எனவே அவர் இந்தியாவுக்காக ஒரு முக்கிய வீரராக நிரூபிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். இந்திய அணி குறிப்பாக தனது போட்டிகளை துபாயில் உள்ள மைதானங்களில் விளையாடப் போகிறது. அங்கு இருக்கும் ஆடுகளங்களில் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு நிச்சயம் நன்மை அளிக்கக்கூடிய வகையில் இருக்கும்.
இதையும் படிங்க:2 உலக கோப்பைல விளையாடியவர்.. சொன்ன எல்லாமே இந்தக் குழந்தை செஞ்சது.. ஆனா டீம்ல இல்ல – ஆகாஷ் சோப்ரா ஆதங்கம்
இதனால் குல்தீப் யாதவ் இந்தியாவிற்கு சிறப்பாக செயல்பட முடியும்” என்று கூறுகிறார். இதே இந்திய அணியில் விராட் கோலி மற்றும் பும்ரா போன்ற ஜாம்பவான் வீரர்கள் இருக்கும்போது டிவில்லியர்ஸ் ஆடுகளத்தின் சூழ்நிலையை அறிந்து குல்தீப் யாதவ் இந்திய அணிக்கு ஒரு முக்கிய எக்ஸ் பேக்டராக இருப்பார் என்று தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். காயம் குணமடைந்து தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக மீண்டும் குல்தீப் யாதவ் களம் இறங்க உள்ள நிலையில் இங்கிலாந்து தொடரில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.