2 உலக கோப்பைல விளையாடியவர்.. சொன்ன எல்லாமே இந்தக் குழந்தை செஞ்சது.. ஆனா டீம்ல இல்ல – ஆகாஷ் சோப்ரா ஆதங்கம்

0
60

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கு சஞ்சு சாம்சன் மற்றும் துருவ் ஜூரேல் ஆகியோர் விக்கெட் கீப்பர்களாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல சாம்பியன்ஸ் ட்ராஃபிக்கு ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் கீப்பர்களாக இருக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா இளம் விக்கெட் கீப்பர் குறித்து சில முக்கிய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இரண்டு உலக கோப்பையில் விளையாடியவர்

இந்திய கிரிக்கெட் வாரியம் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷான் ஆகியோரை உள்நாட்டு தொடரில் விளையாட அறிவுறுத்திய நிலையில், அவர்கள் இருவரும் மறுத்து ஐபிஎல் தொடரில் விளையாட கவனம் செலுத்தியதால் சம்பள பட்டியலில் இருந்து இவர்கள் இருவரையும் பிசிசிஐ நீக்கியது. அதற்குப் பிறகு ஸ்ரேயாஸ் ஐயர் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட, இசான் கிசான் அதனைத் தொடர்ந்து உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்தினார்.

இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் இந்திய அணிக்கு இடம் பிடித்திருக்கும் நிலையில், இசான் கிசான் மட்டும் விக்கெட் கீப்பர் பட்டியலில் இடம்பெறவில்லை. அவர் கடந்த 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை மற்றும் 2023ம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை என இரண்டு இந்திய அணியிலும் இடம் பிடித்திருக்கிறார். மேலும் ஒரு நாள் தொடரில் இரட்டை சதமும் அடித்து தனது பேட்டிங் திறமையை நிரூபித்திருக்கும் நிலையில் அவர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தக் குழந்தை அனைத்தையும் செய்தது

இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா விரிவாக கூறும்போது ” நாம் இஷான் கிசானை சீக்கிரமாக மறந்து விட்டதால் அவரை மீண்டும் நினைவில் கொள்ள முடியாதது சுவாரசியமானது. அவர் உலக கோப்பையில் விளையாடி இருக்கிறார், துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பை மற்றும் 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை என இரண்டிலும் இருந்திருக்கிறார். அவர் ஒரு நாள் தொடரில் இரட்டை சதமும் அடித்திருக்கிறார். அவர் ஒரு தவறு செய்தார், முதல் தர கிரிக்கெட்டில் விளையாடாததால் இது பிசிசிஐக்கு பிடிக்கவில்லை.

இதையும் படிங்க:தோனி கோலியை கம்பீருக்கு பிடிக்காதா?. உண்மை என்னனு எனக்கு தெரியும் – கம்பீர் சிறுவயது கோச் பேட்டி

அதற்குப் பிறகு இசான் கிசான் மீண்டும் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடினார். அவர் ஒரு இளம் வீரர் என்பதால் எனக்கு அது குறித்து முழுமையாக புரிகிறது. அவர் முதல் தர கிரிக்கெட்டில் விளையாட மறுத்ததால் நீங்கள் அவரை தண்டித்தீர்கள். அது நியாயமானது. ஆனால் அது இப்போது காலம் கடந்து விட்டது. அந்தக் குழந்தை சொன்னது போலவே அனைத்திலும் விளையாடியது. ஆனால் அவரது பெயர் தற்போது எங்கும் வரவில்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -