இந்தியா நியாயமா நடக்கணும்.. நாங்க எல்லாம் முன்ன மாதிரி இல்ல.. புரிஞ்சுக்கோங்க – ஏபி டிவில்லியர்ஸ் பேட்டி

0
87
Abd

இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளையும் தொடரையும் தோற்பதற்கு ஏபி டிவில்லியர்ஸ் மிகவும் வித்தியாசமான காரணம் ஒன்றை கூறியிருக்கிறார்.

இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக தோற்றது. இந்திய டெஸ்ட் வரலாற்றில் சொந்த மண்ணில் ஏற்பட்ட மிக மோசமான தோல்வியாக அது பதிவாகியது.

- Advertisement -

தென் ஆப்பிரிக்காவிடம் வீழ்ந்த கதை

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு கட்டத்தில் அந்த அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து 63 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்று இருந்தது. அந்த அணியால் முழுதாக 100 ரன்கள் கூட முன்னிலை பெற முடியாது என்கின்ற நிலைமை இருந்தது. அதைத் தாண்டி 124 ரன்கள் இலக்கு இந்திய அணிக்கு கொடுக்கப்பட்டது.

கொல்கத்தா ஈடன் கார்டன் ஆடுகளம் பேட்டிங் செய்ய கடினமாக இருந்தாலும் கூட, இது எட்ட முடியாத இலக்கு கிடையாது. இருந்த போதிலும் தென் ஆப்பிரிக்க அணி புத்திசாலித்தனமான முடிவுகளை எடுத்து சிறப்பான பந்து வீச்சை கொண்டு வந்து வெற்றி பெற்றது. தற்போது நியூசிலாந்து அணியை தொடர்ந்து தென் ஆப்ரிக்க அணியும் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்தியாவில் வைத்து இந்தியாவை வீழ்த்தியது பலரது புருவத்தையும் உயர்த்த வைத்திருக்கிறது.

- Advertisement -

ஏபி டிவில்லியர்ஸ் சொன்ன காரணம்

இதுகுறித்து ஏபி டிவில்லியர்ஸ் பேசும்பொழுது ” இந்திய அணிக்கு தற்போது சில கவலைகள் உள்ளன. அவர்கள் தங்களது சொந்த மண்ணில் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் தொடர்ந்து நான்கு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்திருக்கிறார்கள். என்ன நடந்து கொண்டிருக்கிறது? அவர்கள் சுழல் பந்து வீச்சுக்கு எதிராக மோசமான வீரர்களாக மாறிவிட்டார்களா? உண்மையில் அப்படி கிடையாது. இந்தியாவுக்கு விளையாட வரும் அணிகள் சூழ்நிலையை நன்றாக புரிந்து கொண்டு, சுழல் பந்துவீச்சை சிறப்பாக விளையாட ஆரம்பித்திருக்கின்றன”

இதையும் படிங்க : ஆஸிக்கு சவால் விடறேன்.. இந்த முறை இங்கிலாந்துக்கு அதை தூக்கிட்டு போவோம் – பென் ஸ்டோக்ஸ் எச்சரிக்கை

“இதிலிருந்து வெளியில் வரவேண்டும் என்றால் இந்திய அணி நிர்வாகம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை கேட்கக் கூடாது. ஆடுகள விஷயத்தில் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். நியாயமான டெஸ்ட் ஆடுகளங்களை வாங்க வேண்டும். இந்திய அணி நிர்வாகம் தங்களது மனநிலையை மாற்றிக் கொள்ள வேண்டிய நேரம் இது. தற்போது இந்தியா வரக்கூடிய அணிகள் சிறப்பாக தயாராகி வருவதாக நினைக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -