ரொம்ப யோசிக்காதீங்க.. கோலியை வீழ்த்த இத மட்டும் செய்யுங்க.. தென்னாப்பிரிக்கா பவுலர்களுக்கு பிளான் போட்ட ஏபிடி

0
269

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்றுள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியன் மைதானத்திலும், 2வது டெஸ்ட் போட்டி கேப் டவுன் மைதானத்தில் நடக்கவுள்ளது. இதற்காக இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி பயிற்சி போட்டியில் விளையாடி வரும் சூழலில், திடீரென விராட் கோலி பயிற்சி போட்டியில் இருந்து விலகி லண்டன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. நாளை மீண்டும் இந்திய அணியுடன் விராட் கோலி இணைவார் என்றும், முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாடுவதில் எந்த பிரச்சனையும் இருக்காது என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

தென்னாப்பிரிக்கா மண்ணில் இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரில் வெற்றிபெற்றதில்லை. இதனால் முதல்முறையாக தென்னாப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்த வேண்டுமென்றால் இந்திய அணியில் விராட் கோலி அத்தியாவசியமான வீரராக மாறியிருக்கிறார். ஏனென்றால் 3 முறை தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ளார்.

2013, 2018 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் விராட் கோலி இந்திய அணிக்காக தென்னாப்பிரிக்காவில் விளையாடி இருக்கிறார். இதுவரை தென்னாப்பிரிக்கா மண்ணில் அந்த அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 719 ரன்களை 51.35 பேட்டிங் சராசரியில் விளாசி இருக்கிறார். இதனால் விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தினால் தான் தென்னாப்பிரிக்கா அணி வெற்றியை பற்றி சிந்திக்க முடியும்.

அதில் 2018ஆம் ஆண்டில் செஞ்சுரியனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் விராட் கோலி அடித்த சதத்தை யாராலும் மறக்க முடியாது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா பவுலர்களுக்கு முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் விராட் கோலியை வீழ்த்துவதற்கு சில அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்.

- Advertisement -

அதில் ஏபி டிவில்லியர்ஸ் கூறும் போது, விராட் கோலி வீழ்த்துவதற்கான ஒரே வழி என்னவென்றால் அவருக்கு 4வது ஸ்டம்ப் லைனில் பந்துவீசிவிட்டு காத்திருப்பது மட்டும்தான். அவரின் பேட்டில் இருந்து எட்ஜாகும் ஒரே பந்துக்காக தென்னாப்பிரிக்கா வீரர்கள் காத்திருக்க வேண்டும். மிகச்சிறந்த வீரரை அட்டாக் செய்வது எளிதாக காரியமல்ல.

சச்சின் டெண்டுல்கருக்கு எப்படி இன்ஸ்விங்கர் வீசி எல்பிடபிள்யூ-வுக்கு காத்திருப்பார்களோ, அதேபோல் தான் விராட் கோலிக்கு காத்திருக்க வேண்டும். இல்லையென்றால் அவர் மிட் விக்கெட்டில் ரன்களை சேர்த்து கொண்டே இருப்பார். அதனால் 4வது ஸ்டம்ப் லைனில் வீசுவதை கடந்து விராட் கோலியை வீழ்த்துவதற்கு தென்னாப்பிரிக்கா பவுலர்களுக்கு வேறு வழியில்லை என்று தெரிவித்துள்ளார்.