இந்திய கிரிக்கெட்

படிக்கலை விட இந்த பையன்தான் டெக்னிக்ல ஸ்ட்ராங்.. முதல்ல அவர் வெளிநாட்ல ஆடி காட்டட்டும் – ஏபி டிவில்லியர்ஸ் கருத்து

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய இளம்படை வீரர் துருவ் ஜூரெலின் சிறந்த பேட்டிங் தொழில்நுட்பத்தை ஏபி டி வில்லியர்ஸ் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

​இந்தியா, இலங்கை சுற்றுப்பயணத்தில் கொழும்புவில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையை அடைந்துள்ளது. மிடில் ஆர்டரில் களமிறங்கிய துருவ் ஜூரெல் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோர் மிகச் சிறப்பான முறையில் சதம் விளாசி அணிக்கு மிகப்பெரிய ஸ்கோரை ஈட்டித் தந்தனர்.

​இந்திய அணியின் புதுமுக வீரர்கள் வெளிநாட்டு மண்ணிலும் தங்களின் அபார திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை பெற்று வருகிறார்கள். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் கடினமான சூழ்நிலையிலும் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்க்கும் திறன் இவர்களிடம் அதிகமாக காணப்படுகிறது.

​இந்த ஆட்டம் குறித்து ஆர்சிபி லெஜண்ட் ஏபி டி வில்லியர்ஸ் தனது யூடியூப் சேனலில் பேசும்போது, “துருவ் ஜூரெல் தனது அபார சதத்தால் தனித்து தெரிந்தார். கே எல் ராகுலுக்கு அடுத்தபடியாக இவரிடம் மிகவும் நல்ல டெக்னிக் இருக்கிறது. நீண்ட காலம் நிலைத்து விளையாடக்கூடிய நல்ல டெக்னிக் கொண்ட மற்றொரு இந்திய பேட்டர் ஜூரெல் என்று நான் நினைக்கிறேன். மிடில் ஆர்டரில் ஒரு அருமையான சதத்தை அடித்து, அணிக்கு தேவையான மொமண்டத்தை அவர் தக்கவைத்தார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​மேலும் தேவ்தத் படிக்கல் பற்றி அவர் பேசும்போது, “படிக்கலுக்கு இனி தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படும் அளவுக்கு அவர் போதுமான அளவு சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்று நான் நினைக்கிறேன். தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் பவுன்ஸ் அதிகமாக இருக்கும் ஆஸ்திரேலியா பிட்ச்களில் அவர் எப்படி விளையாடுகிறார் என்று பார்ப்போம். அனைத்து கண்டிஷன்களிலும் நம்பர் த்ரீ பேட்டராக களமிறங்கும் அந்த சவாலை பெற அவர் தகுதி பெற்றுவிட்டார், மேலும் தன் வழியில் வரும் எதையும் எதிர்கொள்ளும் ஆட்டம் அவரிடம் உள்ளது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by