இந்திய கிரிக்கெட்

ஐசிசி டெஸ்ட் ரேங்கிங்.. கில்லுக்கு ரிஷப் பண்ட் வைத்த செக்.. ஜெய்ஸ்வாலுக்கு நடந்த சோகம் – புது அப்டேட்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இங்கிலாந்து அணியின் ஹேரி புரூக் 874 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

அவரைத் தொடர்ந்து இங்கிலாந்தின் ஜோ ரூட் 850 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 840 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

​ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 4-வது இடத்தையும், தென்னாப்பிரிக்காவின் டெம்பா பவுமா 5-வது இடத்தையும் வகிக்கின்றனர். நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா 6-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

​இந்திய வீரர்களைப் பொறுத்தவரை ரிஷப் பண்ட் 6 இடங்கள் முன்னேறி 711 புள்ளிகளுடன் 7-வது இடத்தைப் பிடித்துள்ளார். அதே 711 புள்ளிகளுடன் சுப்மன் கில் 8-வது இடத்தில் உள்ளார்.
​நியூசிலாந்தின் டேரில் மிட்செல் 9-வது இடத்தைப் பிடித்துள்ள நிலையில், பாகிஸ்தானின் பாபர் அசாம் 709 புள்ளிகளுடன் 10-வது இடத்தில் தொடர்கிறார். இன்னொரு இந்திய வீரர் ஜெய்ஷ்வால் 71 புள்ளிகள் உடன் 11-வது இடத்தில் இருக்கிறார்.

- Advertisement -

​ஐ.சி.சி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியல்:

​ஹேரி புரூக் – 874 புள்ளிகள்
​ஜோ ரூட் – 850 புள்ளிகள்
​ஸ்டீவ் ஸ்மித் – 840 புள்ளிகள்
​டிராவிஸ் ஹெட் – 811 புள்ளிகள்
​டெம்பா பவுமா – 775 புள்ளிகள்
​ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து) – 740 புள்ளிகள்
​ரிஷப் பண்ட் – 711 புள்ளிகள்
​சுப்மன் கில் – 711 புள்ளிகள்
​டேரில் மிட்செல் – 710 புள்ளிகள்
​பாபர் அசாம் – 709 புள்ளிகள்
​யஷஸ்வி ஜெய்ஸ்வால் – 701 புள்ளிகள்

- Advertisement -
Published by