360 டிகிரியா இருந்தாலும், நானும் சில பவுலர்களுக்கு பயந்துருக்கேன்… என்னை அச்சுறுத்திய 3 பவுலர்கள் இவர்கள் தான்! – ஏபி டி வில்லியர்ஸ் பேட்டி!

0
13463

என்னுடைய கிரிக்கெட் வாழ்வில், என்னை அச்சுறுத்திய மூன்று பவுலர்கள் யார்? யார்? என்பதை சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார் ஏபி டி வில்லியர்ஸ்.

சர்வதேச கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரர்களுள் ஒருவராகவும், அதிரடிக்கு பெயர் போனவர் என்றும் புகழ்பெற்றவர் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் வீரர் ஏபி டி வில்லியர்ஸ். இவர் தனது சமீபத்திய பேட்டியில் தன்னை அச்சுறுத்திய மூன்று பவுலர்கள் யார்? யார்? என்பது குறித்து பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

அதில் முதலாவதாக இருப்பவர் ஆஸ்திரேலியா அணியின் ஜாம்பவான் ஷேன் வார்னே. “2006 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது நான் அவரை எதிர்கொண்டேன். அப்போது அவர் வீசிய சில பந்துகளை எதிர்கொள்வது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. அதுபோன்ற பந்துகளை அதற்கு முன்னர் நான் எதிர்கொண்டதே இல்லை. ஒவ்வொரு முறை நான் அவரை சந்திக்கும்பொழுதும் என்னை எளிதாக விக்கெட் எடுத்து விடுகிறார். ஆரம்பகட்ட கிரிக்கெட் வாழ்வில் அவரது பந்துவீச்சை எதிர்கொள்வதற்கு நான் மிகவும் சிரமப்பட்டேன்.” என்றார்.

அடுத்ததாக ஜஸ்ட்பிரீத் பும்ரா, “பும்ராவின் பந்துவீச்சு ஆக்ஷனையை கணிப்பதற்கு எனக்கு சற்று சிக்கலாக இருந்தது. மேலும் அவர் யார்கர் பந்துகளை எதிர்கொள்வது மிகவும் சிரமம். எந்த நேரத்திலும் விக்கெட்டை எடுத்து விடுவார் என்கிற நோக்கத்திலேயே அவரது பந்துவீச்சை எதிர்கொண்டு வந்தேன். அவரது ஒரு பந்தை அடித்துவிட்டால், மற்றொரு பந்தில் விக்கெட் எடுத்து பதிலடி கொடுப்பார்.” என்று பேசினார்.

கடைசியாக ரஷீத் கான், “ரஷீத் கான் பந்துவீச்சை நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமான பந்துவீசி திணறடிப்பார். அதிலும் குறிப்பாக அவரது கூக்ளி பந்தை கணிப்பது அவ்வளவு சிரமம். லெக் ஸ்பின் மற்றும் கூக்ளி இரண்டுக்கும் ஒரே விதமாக பிடித்து வீசுவார். எந்த பந்து எது? என்பதை எளிதில் கணிக்க முடியாது. இதுவும் நான் எதிர்கொள்வதற்கு சிக்கலாக இருந்தது.” என டி வில்லியர்ஸ் கூறினார்.

- Advertisement -

இவர்கள் மூவரின் பந்துவீச்சு தான் என்னை அச்சுறுத்தியது. மேலும் பல ஜாம்பவான்கள் பந்துவீச்சை எதிர்கொண்டிருக்கிறேன். ஆனால் என்னால் அவர்களது பந்துவீச்சை ஓரளவிற்கு கணிக்க முடிந்தது.” என்று டிவில்லியர்ஸ் பேசினார்.