ஆஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்ட் எல்லா காலத்திலும் சிறந்த ஐபிஎல் பிளேயிங் லெவனை தேர்ந்தெடுத்திருக்கிறார். அதில் ஐபிஎல் தொடரில் சிறந்த வீரரான விராட் கோலி மற்றும் ஆர்சிபி அணியை முற்றிலுமாக புறக்கணித்து இருக்கிறார்.
மேலும் அவருடைய தேர்வில் பெரும்பாலும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணி வீரர்கள் இருக்கிறார்கள். இதன் காரணமாக பார்சிபி அணி ரசிகர்கள் ஆடம் கில்கிறிஸ்ட் தேர்வு பற்றி சமூக வலைதளத்தில் விமர்சனம் செய்து வருகிறார்கள். ஏற்கனவே இவர் ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறாது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரோஹித் – விராட் கம்பேரிசன்
ஐபிஎல் தொடரை எடுத்துக் கொள்ளும் பொழுது ரோகித் சர்மா 18 சீசன்களில் இதுவரையில் ஒரே ஒரு முறை மட்டுமே 500 ரன்கள் தாண்டி எடுத்திருக்கிறார். மேலும் ஒரு முறை கூட 600 ரன்கள் அவர் எடுத்தது கிடையாது. ஒரு பெரிய வீரராக மேலும் துவக்க ஆட்டக்காரராக அவருடைய ஒட்டுமொத்த ஐபிஎல் பேட்டிங் செயல்பாடு மிகவும் சுமாராக இருக்கிறது.
அதே சமயத்தில் விராட் கோலியை எடுத்து பார்க்கும் பொழுது அவர் அதிகபட்சமாக ஒரு சீசனில் 900 ரன்கள் தாண்டி எடுத்து விட்டார். சமீபத்தில் பார்க்கும் பொழுது கடந்த ஆண்டு அவர் 700 க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்திருந்தார். இந்த ஆண்டு 500 ரன்கள் தாண்டி ஆரஞ்சு தொப்பியை வெல்வதற்கான அதிகபட்ச வாய்ப்பிலும் இருக்கிறார். இந்த நிலையில் தான் எல்லா காலத்திலும் சிறந்த ஐபிஎல் பிளேயிங் லெவனில் ஆடம் கில்கிறிஸ்ட் ரோகித் சர்மாவை வைத்துக்கொண்டு விராட் கோலியை புறக்கணித்து இருக்கிறார்.
எல்லா காலத்திலும் சிறந்த அணி
இவருடைய அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் டேவிட் வார்னர் இருக்கிறார்கள். அடுத்த இரண்டு இடங்களில் சுரேஷ் ரெய்னா மற்றும் சூரியகுமார் யாதவ் வருகிறார்கள். தொடர்ந்து பொல்லார்டு, சுனில் நரைன், ரவீந்திர ஜடேஜா, பும்ரா, மலிங்கா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் இருக்கிறார்கள். மேலும் இந்த அணிக்கு அவர் தோனியை கேப்டனாக தேர்ந்தெடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த அணியில் ஆர்சிபி அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடிய ஏபி.டிவில்லியர்ஸ் மற்றும் வெயில் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஒரு போட்டி 303 ரன்.. துக்கத்தை அடக்கிக்கிட்டேன்.. 3வது வாய்ப்பில் யாருனு காட்டறேன் – கருண் நாயர் பேட்டி
கில்கிறிஸ்ட் ஐபிஎல் அணி: தோனி (சி), ரோஹித் சர்மா, டேவிட் வார்னர், சுரேஷ் ரெய்னா, சூர்யகுமார் யாதவ், கீரன் பொல்லார்ட், சுனில் நரைன், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரிட் பும்ரா, லசித் மலிங்கா, புவனேஷ்வர் குமார்.






