39 ஆவது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழா இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ள நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 18 வது ஆண்டில் முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வெற்றி பெற்று சாதனை படைத்தது.
இந்த சூழ்நிலையில் தென்னாப்பிரிக்க முன்னாள் வீரரும் பெங்களூர் அணியின் முன்னாள் வீரருமான டிவில்லியர்ஸ் இது குறித்து சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி இதுவரை ஒரு சில பெரிய வீரர்களை மட்டுமே விளையாடி வந்தாலும் ஐபிஎல் கோப்பையை வெற்றி பெறும் அளவுக்கு சிறந்த வீரர்களை அந்த அணி பெற்று இருக்கவில்லை. இதனை களைந்து கடந்த ஆண்டு சிறப்பான வீரர்களை வாங்கிய பெங்களூர் அணி அதன் மூலமாக கோப்பையை கைப்பற்றி நீண்ட அவருடைய ஏக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.
வழக்கம் போலவே விராட் கோலி இந்த ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு அதிக ரன்கள் குவித்தார். இருப்பினும் கடந்த ஆண்டு மற்ற ஆண்டுகளைப் போல அவருக்கு அதிக அழுத்தம் ஏற்பட்டிருக்காது என அவர் உணர்ந்திருப்பதாக டிவிலியர்ஸ் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “கடந்த ஐபிஎல் சீசனை பொருத்தவரை பெங்களூர் அணியில் மற்ற வீரர்களும் சிறப்பாக செயல்பட முன் வந்தனர். கடந்த ஆண்டுகளில் இரண்டு அல்லது மூன்று வீரர்கள் மட்டுமே செயல்பட்டு வந்த நிலை மாறி ஒட்டுமொத்த அணியும் தங்களது பங்களிப்பை சிறப்பாக வழங்கியது. இதற்கு இறுதிப்போட்டி ஒரு முக்கிய காரணமாக கூறலாம். அந்தப் போட்டியில் விராட் கோலி 43 ரன்கள் எடுத்திருந்தாலும் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய பட்டிதார், லிவிங்ஸ்டன்,ஜிதேஷ் மற்றும் ஷெப்பர்ட் ஆகியோர் வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தார்கள்.
அதேபோல பந்துவீச்சாளர்களும் தங்களுடைய சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தினார்கள். இதனால் அணியின் முழு சுமையையும் தான் சுமக்க வேண்டியதில்லை என்பதை விராட் கோலி உணர்ந்து தெளிந்து இருப்பார். விராட் கோலி நிச்சயமாக அணியின் உயிர் நாடி. அவரது செயல்பாட்டின் காரணமாக மட்டுமல்ல அணிக்கு அவர் கொண்டு வரும் ஆற்றல் காரணமாகவே முதுகெலும்பாக செயல்படுகிறார்” என்று பேசி இருக்கிறார்.