என் நண்பன் விராட் கிடையாது.. இந்த 5 பேர்தான் நான் ஆடியதில் சிறந்த வீரர்கள் – ஏபி டிவில்லியர்ஸ் தேர்வு

0
163
Virat

தென் ஆப்பிரிக்க லெஜன்ட் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் தான் எதிர்த்து விளையாடியதில் சிறந்த ஐந்து வீரர்கள் யார் என்று பட்டியலிட்டு இருக்கிறார். அவருடைய நெருங்கிய கிரிக்கெட் நண்பரான விராட் கோலியின் பெயரை அவர் தேர்வு செய்யவில்லை.

ஏபி.டிவிலியர்ஸ் மற்றும் விராட் கோலி இருவரும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த நட்பை பரிமாறிக் கொண்டவர்களாக இருந்து வருகிறார்கள். ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக இருவரும் இணைந்து விளையாடிய காலகட்டத்தில் சிறந்த நண்பர்களாக மாறினார்கள்.

- Advertisement -

சிறந்த ஐந்து வீரர்கள்

இந்த நிலையில் ஏபி டிவில்லியர்ஸ் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் அவர் எதிர்த்து விளையாடியதில் சிறந்த ஐந்து சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் யார் என்று கேள்வி முன் வைக்கப்பட்டது. இதில் விராட் கோலிக்கு எதிராக ஏபி டிவில்லியர்ஸ் விளையாடி இருந்த பொழுதும் அவருடைய பெயரை தேர்ந்தெடுக்கவில்லை.

இதுகுறித்து ஏபி டிவில்லியர்ஸ் பேசும்பொழுது “ஜாக் காலிஸ், ஆண்ட்ரூ பிளின்டாப், முகமது ஆசிப், வார்னே மற்றும் சச்சின் டெண்டுல்கர். இதில் சச்சின் டெண்டுல்கர் பேட்டிங் செய்ய வரும் பொழுது அவருக்கு கிடைக்கும் வரவேற்பு அற்புதமானது. அவர் பேட்டிங் செய்வதை பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும்”

- Advertisement -

ஸாரி விராட்

“விராட் என்னை மன்னித்து விடவும். இந்தியாவிலிருந்து சச்சின் டெண்டுல்கரை தேர்ந்தெடுப்பேன். இது போன்ற கேள்விகளுக்கு பதில் அளிப்பது ஏன் கடினம் என்றால் இதனால்தான். காலிஸ் மிகச் சிறந்த ஆல் ரவுண்டர். எல்லா காலத்திலும் சிறந்த கிரிக்கெட் வீரராக அவர்தான் இருப்பார்”

இதையும் படிங்க : மக்கள் என்னை அந்த மாதிரி சொல்றது பிடிக்கல.. நான் சொல்ற புள்ளிவிபரத்தை பாருங்க – ரிங்கு சிங் ஓபன் பேட்டி

“நான் எதிர்த்து விளையாடியதில் என்னை மிகவும் சிரமப்படுத்திய வேகப்பந்து வீச்சாளர் பாகிஸ்தான் முகமது ஆசிப். இதே போல நான் வார்னேவுக்கு எதிராக விளையாடுவதை விரும்பினேன். அவர் என்னை பெரிய அளவில் சிரமப்படுத்தவில்லை ஆனால் அவருடைய ஆளுமை, அவருடைய தொப்பி அவருடைய பொன்னிற முடிகள் என்னை மிகவும் கவர்ந்தவை. இதேபோல ஆண்ட்ரூ பிளின்டாப் சிறந்த ஆல்ரவுண்டர். எட்ஜ்பஸ்ஸ்டன் டெஸ்டில் காலிஸ்க்கு எதிராக அவர் அடித்த யார்கர்தான் மிகச் சிறந்தது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -