மக்கள் என்னை அந்த மாதிரி சொல்றது பிடிக்கல.. நான் சொல்ற புள்ளிவிபரத்தை பாருங்க – ரிங்கு சிங் ஓபன் பேட்டி

0
16
Rinku

தற்போது உத்திர பிரதேஷ் டி20 லீக் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ரிங் சிங் தன்னுடைய கிரிக்கெட் எதிர்பார்ப்புகள் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.

அடுத்து நடைபெற இருக்கும் ஆசியக் கோப்பை டி20 தொடரில் இந்திய அணியில் ரிங்கு சிங் இடம் பெற்று இருக்கிறார். பினிஷிங் ரோலுக்கு மட்டுமே செயல்படும் அவரை கம்பீர் விரும்ப மாட்டார் என்று கூறப்பட்டது. ஆனாலும் ரியான் பராக் மற்றும் வாஷிங்டன் சுந்தர் போன்ற ஆல் ரவுண்டர்களை வெளியில் வைத்து விட்டு இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

- Advertisement -

என்னுடைய கனவு இதுதான்

இந்திய அணிக்காக மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடக்கூடிய எதிர்கால வீரர்களாக ரிங்கு சிங் மற்றும் திலக் வர்மா போன்றவர்கள் பார்க்கப்பட்டார்கள். இந்த நிலையில் தற்போது இவர்கள் இருவருமே இந்திய டி20 அணியில் மட்டுமே இடம்பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ரிங்கு சிங் பேசும்பொழுது “நான் சிக்ஸர்கள் அடிப்பதை ரசிகர்கள் விரும்புவார்கள் என்று எனக்கு தெரியும். அதே சமயத்தில் என்னுடைய ரஞ்சி டிராபி ரன் ஆவரேஜ் நல்ல முறையில் இருக்கிறது என்பதையும் சொல்லிக் கொள்கிறேன். அதில் என்னுடைய ரன் ஆவரேஜ் 55 க்கு மேலும் இருக்கிறது. என்னை ஒரு டி20 ஸ்பெசலிஸ்ட் பேட்ஸ்மேன் என்று முத்திரை குத்தப்படுவதை நான் விரும்பவில்லை. எல்லா வடிவத்திலும் என்னால் விளையாட முடியும். இந்தியாவுக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது என்னுடைய கனவு. வாய்ப்பு கிடைத்தால் அதை நான் பயன்படுத்திக் கொள்வேன்”

- Advertisement -

இவர்தான் என்னுடைய ஐடியல்

“சுரேஷ் ரெய்னா பையா என்னுடைய ஐடியல் வீரர். அவர் என்னிடம் எப்பொழுதும் எதற்கும் நீ தயாராக இரு என்று கூறுவார். இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினால் நான் மகிழ்ச்சி அடைவேன். சுரேஷ் ரெய்னா பையா இந்திய அணிக்கு நான் விளையாடும் இடத்தில் விளையாடி நிறைய வெற்றிகளை பெற்றிருக்கிறார். நான் அனைத்து வடிவத்திலும் இந்திய அணிக்கு ஒரே மாதிரியான வீரராக இருக்க விரும்புகிறேன்”

இதையும் படிங்க : ஓயாமல் பறந்த 9 சிக்ஸர்கள்.. நிறுத்தாமல் ருத்ர தாண்டவம் ஆடும் சஞ்சு சாம்சன்.. சூரிய குமாருக்கு தலைவலி

“நான் ஒரு ஓவரில் 5 சிக்ஸர்கள் ஐபிஎல் தொடரில் அடித்த பிறகு மக்கள் எல்லோருக்கும் என்னை தெரிய ஆரம்பித்தது. அவர்கள் நான் தொடர்ந்து சிக்ஸர்கள் அடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அது எனக்கு மிகவும் முக்கியமான ஒரு போட்டியாக வாழ்க்கையில அமைந்தது. மேலும் உலகக் கோப்பை இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்று விரும்புகிறேன்” என தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -