தற்போது சிஎஸ்கே பிளேயிங் லெவனில் தோனி கேப்டன் இல்லாமல் இடம் பெறுவார் என்றால் தேவையே இல்லாமல் அவரது இடம் நிரப்பப்படுவது போல் தனக்கு இருப்பதாக ஏபி டிவில்லியர்ஸ் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்கு ருதுராஜ் கேப்டனாக தொடர்கிறாரா? என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஒருவேளை சஞ்சு சாம்சன் புதிய கேப்டனாக அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
தோனியின் இடம் என்ன?
தற்போது தோனியின் வயதை வைத்து பார்க்கும் பொழுது அவருடைய பேட்டிங் செயல்பாடு மிகவும் மந்தமாக உள்ளது. இதன் காரணமாக கடைசி சில பந்துகளை மட்டுமே விளையாட வருவார். எனவே பேட்டிங் வரிசையில் எட்டு அல்லது ஒன்பதாவது இடத்தில் அவர் வருவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம் உள்ளது.
ஏற்கனவே சிஎஸ்கே அணியில் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் இடம் பெறுவார் என்கின்ற நிலையில், தோனி பிளேயிங் லெவலில் கடைசியில் வருவது எந்த விதத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ஏதாவது போட்டியில் கடைசி சில பந்துகளில் குறிப்பிட்ட ரன்கள் எடுக்க வேண்டி வந்தால் இம்பேக்ட் பிளேயராக விளையாடுவது சரியாக இருக்கும் என வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
ஏபி டிவில்லியர்ஸ் கருத்து
இதுகுறித்து ஏபி டிவில்லியர்ஸ் பேசும்பொழுது “ஒருவேளை தோனி கேப்டன் பொறுப்பை சிஎஸ்கே அணிக்கு ஏற்காமல் பேட்டிங் வரிசையில் எட்டு அல்லது ஒன்பதாவது இடத்தில் வருகிறார் என்றால், அந்த இடம் காரணம் இன்றி நிரப்பப்படுவது போலவும், தவறான காரணங்களுக்காக அவர் அணியில் இருப்பது போலவும் எனக்கு தோன்றுகிறது”
இதையும் படிங்க : ஆர்சிபி ஹைதராபாத் அணிகளுக்கு ஏற்பட்ட சோகம்.. முதல் போட்டியில் பெரிய இழப்பு – வெளியான செய்திகள்
“ஒரு தனி வீரரால் கோப்பையை வெல்ல முடியாது. எப்போதும் ஒரு அணியால் மட்டுமே கோப்பையை வெல்ல முடியும். தோனிக்குப் பிறகு ருதுராஜ் இல்லை சஞ்சு சாம்சன் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு சரியானவர்களாக இருப்பார்கள்” என்று கூறியிருக்கிறார்.






