ஆர்சிபி ஹைதராபாத் அணிகளுக்கு ஏற்பட்ட சோகம்.. முதல் போட்டியில் பெரிய இழப்பு – வெளியான செய்திகள்

0
2
Rcb

இந்த மாதம் மார்ச் 28ஆம் தேதி துவங்க இருக்கும் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு சோகமான செய்தி வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ஆர்சிபி மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மார்ச் 28ஆம் தேதி மோதிக்கொள்ள இருக்கின்றன. இரண்டு பெரிய அதிரடியான அணிகள் மோதிக் கொள்வதால் எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

- Advertisement -

இரண்டு அணிகளுக்கான சிக்கல்

நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணி முதல் சுற்றில் ஜிம்பாபே மற்றும் இலங்கை அணிகளிடம் தோல்வி அடைந்து முதல் சுற்றோடு வெளியேறியது. இது டி20 உலகக்கோப்பை வரலாற்றில் ஆஸ்திரேலியா அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது.

இதற்கு முக்கிய காரணமாக ஆஸ்திரேலியா நட்சத்திர வீரர்களின் காயம் அமைந்திருந்தது. முன்னணி வீரர்கள் ஜோஸ் ஹேசில்வுட் மற்றும் பேட் கம்மின்ஸ் இருவரும் காயத்தால் விளையாடாமல் போனது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

- Advertisement -

வெளியான செய்திகள்

தற்போது காயத்தில் இருந்து ஜோஸ் ஹேசில்வுட் மற்றும் பேட் கம்மின்ஸ் முழுமையாக குணமடையவில்லை என்று செய்திகள் தெரிவிக்கிறது. இதன் காரணமாக இருவரும் மார்ச் 28ஆம் தேதி ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் விளையாட மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: வரலாறை தெரிஞ்சுக்கணும்.. தனி ஒருத்தனா நின்னு ரோஹித் சர்மாவை உருவாக்கியது நான்தான் – ரிக்கி பாண்டிங் பேச்சு

இந்த நிலையில் இவர்கள் மேற்கொண்டு எத்தனை போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என்பது குறித்து தெளிவான செய்திகள் எதுவும் வரவில்லை. ஆனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு புதிய கேப்டனாக இஷான் கிஷானை கொண்டுவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் பேட் கம்மின்ஸ் நிறைய போட்டிகளில் விளையாட வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது.

- Advertisement -