இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட்க்கு மூன்றாவது நடுவர் அவுட் கொடுத்தது குறித்து ஏபி.டிவில்லியர்ஸ் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 147 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடி 121 ரன்கள் மட்டுமே எடுத்து 25 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்தது. இதில் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்திருந்த ரிஷப் பண்ட் விக்கெட் மிக முக்கியமாக அமைந்திருந்தது.
ரசிகர்களை வெறுப்பேற்றிய நட்சத்திர வீரர்கள்
இந்த நிலையில் மிக குறைந்த இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியினர் வெறும் 29 ரன்கள் எடுப்பதற்குள் முக்கிய ஐந்து நட்சத்திர விக்கெட்டுகளை இழந்து விட்டார்கள். வெல்ல வேண்டிய போட்டியை நட்சத்திர பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற பேட்டிங் சிக்கலான நிலைமைக்கு கொண்டு சென்றது.
இந்த நிலைமையில் களத்திற்கு வந்த ரிஷப் பண்டு சிறப்பான முறையில் விளையாடிய இந்திய அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார். ரிஷப் பண்ட் அரைசதம் தாண்டி 57 பந்தில் 64 ரன்கள் எடுத்திருந்தபோது, அஜாஸ் பட்டேல் பந்துவீச்சில் எல்பிடபிள்யு ஆகி வெளியேறினார். தற்பொழுது இதுதான் பெரிய சர்ச்சையாகி இருக்கிறது.
ஏபி.டிவில்லியர்ஸ் விமர்சனம்
ரிஷப் பண்ட் பேட்டில் பந்து பட்டதற்கான துல்லியமான சாட்சியம் ஏதுமில்லை. சிறிய அதிர்வு காணப்பட்டதை வைத்து அவுட் என கொடுக்கப்பட்டது. அந்த நேரத்தில் பந்து பேட்டில் பட்டதா இல்லையா என்பதை கண்டறிய ஹாட் ஸ்பாட் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை. தற்பொழுது இதன் காரணமாக இந்திய அணி தோல்வியடையும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க : WTC பாயிண்ட்ஸ் டேபிள்.. கீழே இறங்கிய இந்திய அணி.. ஆதிக்கம் முடிந்தது.. மாறிய புள்ளி நிலவரங்கள்
இது குறித்து விமர்சனம் செய்திருக்கும் ஏபி.டிவில்லியர்ஸ் பேசும் பொழுது “ஆரம்பித்திருக்கும் சர்ச்சை! மீண்டும் ஒரு கிரே பகுதி. ரிஷப் பண்ட் பேட்டில் பந்து பட்டதா இல்லையா? அந்தப் பந்து அவரது பேட்டை தாண்டும்போது ஸ்னிக்கோ மீட்டரில் கொஞ்சம் ஒரு அதிர்வு காணப்பட்டது. ஆனால் அந்த பந்து உறுதியாக பேட்டில் பட்டதா? என்று நமக்குத் தெரியவில்லை. இதுகுறித்துதான் நான் எப்பொழுதும் கவலைப்படுகிறேன். இது ஒரு பெரிய டெஸ்ட் போட்டியில் பெரிய தருணத்தில் நடக்கிறது. இப்படியான நேரத்தில் ஹாட் ஸ்பாட் தொழில்நுட்பம் எங்கே?” என்று கேள்வி கேட்டு விமர்சனம் செய்திருக்கிறார்.